மு.க.ஸ்டாலின்

“சைதாப்பேட்டை தி.மு.கவின் பேட்டை” கலைஞரின் சிலையை திறந்து வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!

தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க திமுக சார்பில் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

“சைதாப்பேட்டை தி.மு.கவின் பேட்டை” கலைஞரின் சிலையை திறந்து வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தெற்கு மாவட்டம் சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கலைஞரின் மார்பளவு சிலையை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னதாக அந்த அலுவலகத்தில் கலைஞர் கணினி கல்வியகத்தை திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து தொண்டர்கள் முன்னிலையில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “இன்று தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளை ஏழை எளிய மாணவர்களுக்கு உதவும். தலைவர் சிலையை தமிழகம் முழுவதும் திறந்து வருகிறோம். சென்னையை பொறுத்தவரை இது நான்காவது சிலை. ஈரோடு, காஞ்சிபுரம், திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளில் கலைஞர் சிலையை திறக்க காரணம் அவர் செல்லாத ஊர் கிடையாது சிலை வைத்துதான் அவருக்கு பெருமை தேடிதர வேண்டிய அவசியம் இல்லை அவர் கொள்கையை சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க இவை பயன்படும்.

1967ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்காக தி.மு.க பொருளாளராக இருந்த தலைவர் கலைஞரிடத்தில் ரூ. 10 லட்சம் நிதி திரட்டச்சொல்லி பேரறிஞர் அண்ணா ஆணையிட்டார். அவரது ஆணையை ஏற்று தமிழகம் முழுவதும் சுற்றி பணியாற்றி ரூ.11 லட்சமாக நிதியை திரட்டி அண்ணாவிடம் வழங்கினார். அதன் பிறகு தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயரை அறிவிக்கும் பொது கலைஞரின் பெயரை அறிவிக்காமல் ‘சைதாப்பேட்டை 11 லட்சம்’ என்று அழைத்து பேரறிஞர் அண்ணா அறிவித்தார்.

“சைதாப்பேட்டை தி.மு.கவின் பேட்டை” கலைஞரின் சிலையை திறந்து வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!

அதனையடுத்து, 1967 இல் தலைவர் கலைஞர் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டுதான் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் அண்ணா மறைந்த பிறகு கலைஞர் முதல்வரானார். அதை தொடர்ந்து 1972ம் ஆண்டு தேர்தலிலும் கலைஞர் இங்குதான் போட்டியிட்டு முதல்வரானார் சைதாப்பேட்டை என்றும் தி.மு.கவின் பேட்டை.

நான் சட்டமன்ற உறுப்பினராக உள்ள கொளத்தூர் தொகுதியில் நீட் தேர்வால் உயிரிழந்த அரியலூர் அனிதா நினைவாக தொடங்கப்பட்ட பயிற்சி மையத்தில் இருந்து முதல் கட்டமாக 67 பேர் பணிக்கு சென்றுள்ளனர். அதுபோல, தி.மு.க உறுப்பினர்களின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இதுபோன்ற பயிற்சி முகாம்களை தொடங்கி வைக்க வேண்டும். ஏனெனில். படித்த பட்டதாரி இளைஞர்கள் பா.ஜ.க-அ.தி.மு.க அரசுகளால், வேலை வாய்ப்பில்லாமல் தவித்து வருவதை அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆகையால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஈட்டித்தரும் வகையில் தி.மு.க சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன்.

எப்போதுமே ஆளும் கட்சியாக யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்கள்தான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெறுவது வழக்கம். ஆனால் அதை மீறி இந்த முறை தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியை தொடர்ந்து தற்போது ஊரக உள்ளாட்சிகளிலும் தி.மு.கவின் கொடி பறக்கிறது.

ஆனால் ஊடகங்களில் அ.தி.மு.க தி.மு.க சரிசமமாக இருப்பதாக கூறுகின்றனர். இதேபோலத்தான் நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றிபெற்ற நிலையில் ஊடகங்கள் இதைதான் தெரிவித்தது.

முந்திரிகொட்டை அமைச்சர் ஒருவர் அ.தி.மு.க வளர்பிறை என்றும் தி.மு.க தேய்பிறை என்றும் கூறியுள்ளார். உள்ளாட்சி ஒன்றியங்களில் தி.மு.க 2,100 இடங்களிலும், அ.தி.மு.க 1781 இடங்களிளும் வெற்றி பெற்றுள்ளது. வித்தியாசம் 319. இதேபோல மாவட்ட கவுன்சிலர் போட்டியில் அ.தி.மு.க விட தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அரசியல் காரணமாக அ.தி.மு.கவால் இதனை ஏற்றுக்கொள்ளாது. ஆனால் ஊடகங்கள் இதை ஏன் ஏற்க மாறுகின்றன. நம்மை பற்றி எழுதும் காலம் விரைவில் வரும் 2020 அதை உறுதி செய்யும்.” என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

banner

Related Stories

Related Stories