மு.க.ஸ்டாலின்

“ஊழலாட்சிக்கு முடிவுகட்ட உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பீர்!” - தலைவர் மு.க.ஸ்டாலின்!

கிரிமினல்களிடம் இருந்து தமிழகத்தை மீட்க, ஊழலாட்சிக்கு முடிவுகட்ட முன்னோட்டமாக வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார்.

“ஊழலாட்சிக்கு முடிவுகட்ட உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பீர்!” - தலைவர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உள்ளாட்சியில் நல்லாட்சி மலர, திமுகவுக்கு வாக்களிக்கக் கோரி தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“அனைவருக்கும் அன்பான வணக்கம்.

தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் தற்போதுதான் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை இப்போது நடத்துவோம், அப்போது நடத்துவோம் எனக் கூறி, அ.தி.மு.க அரசு காலம் தாழ்த்தி வந்தது. அதற்குக் காரணம் மக்களைச் சந்திப்பதற்குப் பயம். மக்களுடைய அவசியத் தேவைகளை நிறைவேற்றி இருந்தால்தானே அவர்கள் முகத்துக்கு நேராகச் சந்தித்து வாக்கு கேட்க முடியும்? இவர்கள்தான் எதையுமே செய்யவில்லையே!

தேர்தலைத் தள்ளிவைக்க எத்தனையோ கற்பனையான காரணங்களை நீதிமன்றத்தில் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், அ.தி.மு.க அரசு மக்களை நேரில் சந்திப்பதற்கு பயம் என்பதுதான் உண்மையான காரணம்.

“ஊழலாட்சிக்கு முடிவுகட்ட உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பீர்!” - தலைவர் மு.க.ஸ்டாலின்!

இதைப் பற்றிக் கேட்டால், தேர்தல் நடைபெறாமல் இருக்க தி.மு.கதான் வழக்குப்போட்டது என்பார்கள். நாங்கள் தேர்தலை நிறுத்துவதற்காக வழக்குப் போடவில்லை. தேர்தலை சட்டப்படி, முறையாக நடத்த வேண்டும் என்று கோரித்தான் வழக்குத் தொடுத்தோம். வார்டு வரையறையைச் செய்துமுடித்து, பட்டியல், பழங்குடியினர், பெண்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றையும் முறையாகச் செய்து பின்னர் தேர்தலை நடத்துங்கள் எனக் கோரிக்கை வைத்தோம்.

இதையெல்லாம் செய்யாதது அரசின் தவறுதானே? இப்போதும் தேர்தலை முறையாகவோ, முழுமையாகவோ நடத்தவில்லை. இதுவரை தமிழகத்தில் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி என எல்லா இடங்களிலும் ஒரே சமயத்தில்தான் உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றுள்ளது. தற்போது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் என்கிறார்கள். நகரங்களுக்கு எப்போது தேர்தல் நடத்துவார்கள் எனத் தெரியாது. ஏன் நடத்துவார்களா என்பதே தெரியாது!

கிராமங்களிலாவது முறையாகத் தேர்தலை நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு என எதையுமே இதுவரை செய்யவில்லை.

அதுமட்டுமின்றி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என்று திடீர் அறிவிப்பை வெளியிட்டு அதன் மூலம் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். இப்படி குழப்பத்திற்கு மேல் குழப்பத்தையும், குளறுபடிகளையும் செய்துதான், ஊராட்சித் தேர்தலை நடத்துகிறார்கள்.

தமிழ்நாட்டில் 12,000க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல் நடந்து, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் மக்கள் தங்கள் குறைகளைச் சொல்லி, அவையெல்லாம் அவ்வப்போது தீர்க்கப்பட்டிருக்கும். ஆனால் மக்கள் குறைகளுக்கு கணக்கில்லை. கேட்பதற்கும் நாதியற்று போய்விட்டது.

அதனால்தான் நானும் தி.மு.க மூத்த நிர்வாகிகளும் எல்லா ஊராட்சிகளுக்கும் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தோம். நமது குறைகளைக் கேட்க தி.மு.க இருக்கிறது என்ற தைரியத்தில் அவர்களும் குறைகளைச் சொன்னார்கள்.

“மக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்கள் மனதை வெல்வோம்” என்கிற முழக்கத்தைத்தான் அந்தப் பயணத்துக்கே பெயராகச் சூட்டி இருந்தோம். அதற்கேற்றாற் போல் மக்கள் மனதை முழுமையாக வென்றெடுத்த பயணமாகவே அந்தப் பயணம் அமைந்தது.

மாடமாளிகை, கூடகோபுரம், வண்டி வண்டியாகப் பணம் போன்றவற்றையா மக்கள் கேட்கிறார்கள்? குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலைவசதி, முதியோர் பென்ஷன் கிடைக்கவில்லை என, மிகவும் எளிதாகத் தீர்க்கப்படக்கூடிய, சாதாரண குறைகளைத்தான் சொல்கிறார்கள்.

“ஊழலாட்சிக்கு முடிவுகட்ட உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பீர்!” - தலைவர் மு.க.ஸ்டாலின்!

உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடைபெற்றிருந்தால் இதில் 60 சதவீத குறைகள் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும். தேர்தலை உரிய காலத்தில் நடத்தாதது யார் தவறு? அ.தி.மு.க அரசின் தவறுதானே!

எல்லா இடங்களிலும் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமே சரியாக இல்லை. சுகாதாரச் சீர்கேடு தலைவிரித்து ஆடுகிறது. எங்கேயும் தேவையான அளவு குப்பைத் தொட்டிகளும் இல்லை. குப்பைகளை முறையாக அள்ளுவதுமில்லை.

இதனால் டெங்கு, மலேரியா என ஏகப்பட்ட நோய்கள் பரவுகின்றன. டெங்குவால் ஏற்பட்ட மரணங்கள் எத்தனை தெரியுமா? முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே டெங்கு பாதிப்பால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

இவற்றையெல்லாம் தடுப்பதற்கு பதிலாக டெங்கு விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வதாகக் கூறி அதிலும் கொள்ளை அடித்தார்கள். கொசுக்களைக் காட்டி கோடி கோடியாக கொள்ளை அடிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டான ஆட்சி இந்த ஆட்சிதான்.

“ஊழலாட்சிக்கு முடிவுகட்ட உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பீர்!” - தலைவர் மு.க.ஸ்டாலின்!

இப்படி கொள்ளை அடிக்க வசதியாகத்தான், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்தி வந்தார்கள். அதற்கு 2 காரணங்கள் முக்கியமானவை. தேர்தல் நடந்தால் தி.மு.க வெற்றி பெற்றுவிடும் என்ற பயம் முதல் காரணம். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வந்துவிட்டால் வழக்கம் போலக் கொள்ளை அடிக்க முடியாது என்பது இரண்டாவது காரணம். இதனால் துன்பப்படுவது என்னவோ மக்கள்தான்.

தி.மு.க ஆட்சி என்றாலே உள்ளாட்சியில் நல்லாட்சி நடத்திய ஆட்சி என்பதை மக்களே ஏற்றுக் கொள்வார்கள். முதன்முதலாக உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, உள்ளாட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கக் கூடிய நிதியை 10 சதவிகிதமாக உயர்த்தியது, குடிசைகளே இல்லாத கிராமங்களை உருவாக்க கலைஞரின் வீடு வழங்கும் திட்டம்,. எல்லா கிராமங்களிலும், குளம், நூலகம், விளையாட்டு மைதானம், சுடுகாடு, குடிநீர்ப்பணிகள், சிமெண்ட் சாலைகள் அனைத்தையும் உருவாக்குவதற்கான பெரும் திட்டமான அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 7000 கோடி ரூபாய் விவசாயக் கடன் ரத்து, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிகளவில் கடன் கொடுத்தது என, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றியது திமுக ஆட்சிதான். இவை அனைத்தும் கலைஞர் அரசு செய்த சரித்திரச் சாதனைகள்.

கலைஞர் அவர்கள் ஆட்சியில் தமிழகம், அரிசி, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி, தொழில் வளர்ச்சி என்று பலவகையிலும் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது ஊழலில், லஞ்சத்தில், டெங்குகாய்ச்சலில், காசநோயில் என எவையெல்லாம் மக்களுக்கு எதிரானதோ அவற்றில் எல்லாம் முதலிடமாக உள்ளது. இதுதான் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனை! இதனால் மக்களுக்குத்தான் வேதனை!

“ஊழலாட்சிக்கு முடிவுகட்ட உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பீர்!” - தலைவர் மு.க.ஸ்டாலின்!

எந்த மாநில முதல்வர் மீதும் பதவியில் இருக்கும்போதே கொலைப் புகார் வந்ததில்லை. கொள்ளைப் புகார் வந்ததில்லை. இங்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் எனப் பலர் மீதும் ஊழல் புகார்கள், விசாரணைகள், வழக்குகள் என தமிழ்நாட்டு அமைச்சரவையே ஒரு கிரிமினல் கேபினெட்டாக இருக்கிறது. இது இந்திய அளவிலான அவமானம் இல்லையா?

இப்படிப்பட்டவர்களிடம் இருந்து நாட்டை மீட்பதற்கான முன்னோட்டம்தான் இப்போது வந்துள்ள உள்ளாட்சித் தேர்தல்.

ஊழல் –அவர்கள் செய்யும் வேலை! கொள்ளை – அவர்களுடைய கொள்கை! அதனால், அவர்களிடம் இருந்து மக்களைக் காப்பதுதான் நமது கடமை!

எனவே, இந்த ஊழலாட்சிக்கு முடிவுகட்ட உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பீர் !

நாளை நல்லாட்சி அமைய உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பீர்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories