இந்திய பொருளாதார வளர்ச்சி நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், 2019-2020 நடப்பு காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி ஆறாண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. கடந்த காலாண்டில் 5 ஆக ஜி.டி.பி வளர்ச்சி இந்த காலாண்டில் 4.5 ஆக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஜி.டி.பி வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜிடிபி வீழ்ச்சி இந்திய பொருளாதாரம் குறித்து மக்களிடையே பெரும் அச்சத்தை விதித்துள்ளது. இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஜி.டி.பி வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சி விகிதம்.
இது சாதாரண பொருளாதார மந்தநிலை அல்ல, முன்னெப்போதும் இல்லாத அளவிலான பொருளாதார நெருக்கடி. மக்களை திசைதிருப்புவதை விட்டுவிட்டு , இதிலிருந்து மீள்வது குறித்து அரசு சிந்திக்க வேண்டும்.