மு.க.ஸ்டாலின்

கொடிக்கம்பம் சரிந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு செயற்கைக் கால் பொருத்த தி.மு.க உதவும்: மு.க ஸ்டாலின்

அ.தி.மு.க கொடிக்கம்பம் விழுந்ததில் காலை இழந்த இளம்பெண் ராஜேஸ்வரியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

கொடிக்கம்பம் சரிந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு செயற்கைக் கால் பொருத்த தி.மு.க உதவும்: மு.க ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடந்த சில தினங்களுக்கு முன், கோவை பீளமேடு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சிங்காநல்லூரைச் சேர்ந்த அனுராதா எனும் ராஜேஸ்வரி மீது அ.தி.மு.க கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததில் லாரி ஏறி இளம்பெண்ணின் கால்கள் நசுங்கியது.

இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராஜேஸ்வரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ரத்த நாளங்கள் செயல் இழந்ததால், நேற்று முன் தினம் அவரது இடது கால் அகற்றப்பட்டது.

கொடிக்கம்பம் சரிந்த விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு செயற்கைக் கால் பொருத்த தி.மு.க உதவும்: மு.க ஸ்டாலின்

இந்நிலையில், கோவையில் உள்ள மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ராஜேஸ்வரியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை முறைகள் குறித்தும் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

பின்னர் ராஜேஸ்வரியின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செயற்கை கால் பொருத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்தார்.

அதுமட்டுமல்லாமல், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க சார்பில் ராஜேஸ்வரியின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.5 லட்சத்துக்கான காசோலையையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.கவின் கொடிக்கம்பங்கள், பேனர்கள் சரிந்து விழுவதால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்தார்.

மேலும், விபத்து ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர் அந்த விபத்துக்கு காரணமாக இருந்த அ.தி.மு.க.,வினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

banner

Related Stories

Related Stories