மு.க.ஸ்டாலின்

குழந்தை சுஜித்தை மீட்க அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் சுஜித்தை மீட்பது தொடர்பாக அரசை வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

குழந்தை சுஜித்தை மீட்க அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் நேற்று மாலை 5.40 மணியளவில் 2 வயதுடைய சுஜித் என்ற சிறுவன் செயல்படாத ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்துள்ளான்.

இதனையடுத்து போலிஸ் மற்றும் தீயணைப்புத்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை காப்பாற்றும் வகையில் நவீன கருவி ஒன்றை தயாரித்த மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

குழந்தை சுஜித்தை மீட்க அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

அதுமட்டுமல்லாமல் தேசிய பேரிடர், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என பலர் குழந்தையை மீட்கும் பணியில் உள்ளனர். கிட்டத்தட்ட 17 மணிநேரத்திற்கும் மேலாக கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது.

20 அடி ஆழத்தில் விழுந்த குழந்தை தற்போது 70 அடிக்கும் கீழே உள்ள ஆழத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் செய்தி காண்போரையும், கேட்போரையும் அதிர்ச்சியுற வைத்திருக்கிறது. மேலும், சமூக வலைதளங்களில் #SaveSujith #PrayForSujith போன்ற ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குழந்தையை மீட்பது குறித்து அரசை வலியுறுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “குழந்தை சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பத்தார் துடிப்பது போன்று நாமும் துடித்துக்கொண்டிருக்கிறோம்.”

“ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்க அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட வேண்டும் என்றும், தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories