மும்பையில் நடைபெற்ற Under 18 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 66 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.
இதன் இறுதிப்போட்டியில் ஜெர்மனி வீரரை வீழ்த்தி 14 வயதான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
தங்கப்பதக்கம் வென்ற சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது. அதுபோல, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், தமிழரான பிரக்ஞானந்தா இளைஞர்களுக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விஷ்வநாதன் ஆனந்த் போன்ற பல ஜாம்பவான்களின் பாராட்டுகளை பெற்றுள்ள பிரக்ஞானந்தா பல்வேறு சிகரங்களைத் தொட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.