தமிழகத்தில் கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் எடப்பாடி அரசோ தமிழகம் வரும் மோடிக்காக பேனர் வைப்பதற்கு நீதிமன்றம் படி ஏறி கெஞ்சிக் கொண்டிருக்கிறது. மேலும், ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழக அமைச்சர்கள் அனைவரும் நாங்குநேரியில் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். மேலும், டெங்கு பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு தீவிர சிகிச்சையை உடனடியாக அளிக்கும்படி மருத்துவர்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து நேரடியாக சந்தித்தேம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையை பொறுத்தவரையில் மட்டும் ஆண்கள் 17 பேரும், பெண்கள் 14 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கூட தெரியப்படுத்தாமல் இதனை மூடி மறைத்து மர்மக் காய்ச்சல் என பொய் பிரசாரம் செய்து வருகிறது அதிமுக அரசு.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய விஜயபாஸ்கரோ டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை குறித்து கவலையுறாமல் கொ.மு., கொ.பி என கேளிக்கையாக பேசியிருப்பது கண்டனத்திற்குரிய மற்றும் வருந்தத்தக்கது என்றார்.
போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய சிகிச்சையை தமிழக அரசு வழங்கிட வழிவகை செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களும் டெங்கு பாதிப்பு குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேனர் வைப்பதற்காக நீதிமன்றம் சென்ற எடப்பாடி அரசால் ஏன் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடவில்லை என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்”.