மு.க.ஸ்டாலின்

ஆள்மாறாட்டம் செய்வோருக்கு சீட் கொடுக்கும் நீட் தேர்வை இனியும் அனுமதிப்பதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

ஆள்மாறாட்டம் செய்வோருக்கு சீட் கொடுக்கும் நீட் தேர்வை இனியும் அனுமதிப்பதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்திருப்பது தமிழகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு மும்பையில் நடந்த நீட் தேர்வில் உதித் சூர்யா தேர்ச்சி பெற்று தேனியில் உள்ள கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். தற்போது அந்த மாணவர் மீது சர்ச்சைக்குரிய புகார் எழுந்ததால் கல்லூரி முதல்வர் விசாரணையை மேற்கொண்டார்.

அதில், மாணவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த கல்லூரி முதல்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தலைமறைவான மாணவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

ஆள்மாறாட்டம் செய்வோருக்கு சீட் கொடுக்கும் நீட் தேர்வை இனியும் அனுமதிப்பதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்

மேலும், இந்த மோசடி குறித்து விசாரிக்க கல்லூரி சார்பில் 4 பேராசிரியர்கள் கொண்ட குழுவை கல்லூரி நிர்வாகம் நியமித்தது. அதில், உதித் சூர்யாவின் தந்தை சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தது தெரியவந்துள்ளது.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஏற்கெனவே உதித் சூர்யா, சென்னையில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் இருமுறை தோல்வியடைந்ததாகவும், பின்னர் மும்பையில் நடந்த நீட் தேர்வில் தன் மகன் தேர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, விஷயம் சூடுபிடிக்க மாணவர் உதித் சூர்யாவும், அவரது தந்தையும் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. பின்னர் உதித் சூர்யா மீதும், அவருக்கு பதிலாக தேர்வு எழுதிய நபர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆள்மாறாட்டம் செய்வோருக்கு சீட் கொடுக்கும் நீட் தேர்வை இனியும் அனுமதிப்பதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்
உதித் சூர்யா மற்றும் ஆள்மாறாட்டம் செய்தவர்

இந்த நிலையில், நீட் பயிற்சி மையம் மூலமாக இன்னும் பலர் ஆள்மாறாட்டம் செய்துள்ளனரா என்ற கோணத்தில் கல்லூரி நிர்வாகவும், காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், +2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யாக்களுக்கு மருத்துவ படிப்புக்கான சீட் வழங்கும் நீட் கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும், அதற்கு துணைப்போகும் அடிமை அ.தி.மு.க அரசையும் அம்பலப்படுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories