புதுச்சேரியில் உள்ள காரைக்காலில் பணிகள் நடைபெற்று வரும் புறவழிச்சாலைக்குத் தி.மு.க முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்படும் என அறிவித்து இருந்தார். இது தொடர்பான கோப்பிற்கு புதுவை முதல்வர் கிரண் பேடி சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தார்.
மேலும், புதுவை இந்திரா காந்தி சிலை முதல் ராஜிவ்கந்தி சிலை வரையிலான சென்னை கடலூர் சாலைக்கும் கலைஞர் கருணாநிதி பெயர் வைக்கவும் அனுமதியளித்துள்ளார். இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ''புதுச்சேரியில் உள்ள இரண்டு சாலைகளுக்கு தலைவர் கலைஞர் அவர்களின் நினைவாக பெயர் சூட்ட முயற்சிகளை முன்னெடுத்த புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், அதற்கு ஒப்புதல் அளித்த புதுவை மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களுக்கும் எனது நன்றி'' எனத் தெரிவித்துள்ளார்.