மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் 

காயிதேமில்லத்தின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காயிதேமில்லத்தின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அப்போது, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் தி.மு.க. சார்பில் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தார். இஸ்லாமியர்களுக்கான அயராது பாடுபடும் இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் என அவர் கூறினார்.

மேலும் பேசிய மு.க.ஸ்டாலின், மும்மொழிக் கொள்கை என்பதின் அடிப்படையில் இந்தி மொழியை திணிக்க பாஜக அரசு முயற்சிக்கிறது. எனவே, மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும் எனவும், அதற்காக தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும் உறுதிபட தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories