முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்ததின விழா மற்றும் தேர்தலில் மகத்தான வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.
கூட்டணிக் கட்சித் தலைவர்களால் மேடை நிறைய - தொண்டர்களால் அரங்கம் நிறைய நடைபெற்ற இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார். அவர் பேசியதாவது :
“ஒற்றுமையோடு தேர்தல் பணியில் ஈடுபட்டு மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறோம். அண்ணா மறைவுக்குப் பிறகு தலைவர் கலைஞர் தலைவராகப் பொறுப்பேற்றுச் சந்தித்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போலவே, இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம்.
தலைவர் கலைஞர் அவர்களே, தேர்தலில் பெருவெற்றி பெறச்செய்த மக்களுக்கு மட்டுமல்ல; எங்களை இன்றைக்கும் இயக்கிக்கொண்டிருக்கிற உங்களுக்கும் நன்றி சொல்கிற கூட்டம் என நெகிழ்ச்சியாகப் பேசினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
மேலும் அவர் பேசுகையில், “தி.மு.க வென்றதால் என்ன பயன் எனக் கேட்டார்கள்...
இந்தப் போராட்டக் குணத்தை தி.மு.க என்றைக்கும் கைவிடாது.
தி.மு.க வென்றதால் என்ன பயன் என நாடாளுமன்றம் கூடுகிறபோது நாங்கள் நிரூபித்துக் காட்டுகிறோமா இல்லையா என்பதைப் பாருங்கள்.
பெரியாரின் சுயமரியாதை, அண்ணாவின் இன உணர்வு, கலைஞரின் மாநில சுயாட்சி எனும் மூன்று ஆயுதங்களை என்றைக்கும் எங்களிடத்திலிருந்து யாராலும் பிரிக்க முடியாது.” என உணர்ச்சிகரமாகப் பேசிய மு.க.ஸ்டாலின், இந்தி திணிப்புக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.