மு.க.ஸ்டாலின்

“குறைகளை கேட்க நானே ஃபோன் பண்றேன்!” முதியவரிடம் மொபைல் எண் வாங்கிய மு.க.ஸ்டாலின்

இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூலூர் தொகுதியில் மக்களை சந்தித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.

“குறைகளை கேட்க நானே ஃபோன் பண்றேன்!” முதியவரிடம் மொபைல் எண் வாங்கிய மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சூலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ள தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சூலூர் தொகுதிக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டியில் இன்று காலை நடைபயணமாகச் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினார். அப்போது, மு.க.ஸ்டாலினின் வருகைக்கு அப்பகுதி மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்தனர்

பின்னர் அருந்ததியினர் காலனியில் திண்ணை பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின், மக்களோடு மக்களாக அமர்ந்து, அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தவித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

அப்போது அங்கிருந்த முதியவர் ஒருவர் “ நீங்கள் சென்னை சென்ற பிறகும் எங்கள் பிரச்னைகள் குறித்து கேட்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். “ உங்கள் பிரச்னையை கேட்டறிய நானே ஃபோம் பண்றேன்” என்று கூறி அந்த முதியவர் மொபைல் எண்ணை பதிவு செய்து கொண்டார் மு.க.ஸ்டலின். அந்த சுவாரஸ்ய சம்பவத்தின் வீடியோவை கீழே காணலாம்.

மக்களின் குறைகளைக் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், கழக ஆட்சி அமைந்ததும் நிச்சயம் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

இதனையடுத்து, மக்களை வஞ்சிக்கும் எடப்பாடியின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இடைத்தேர்தலில் தி.மு.கவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories