கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் 69 ‘குரூப்- 1’ காலிப்பணியிடங்கள் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

தமிழக அரசில் காலியாக உள்ள ‘குரூப் - 1’ உயர் பதவிகளுக்கு 69 காலிப்பணியிடங்களை அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம்.


தமிழ்நாட்டில் 69 ‘குரூப்- 1’ காலிப்பணியிடங்கள் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
கவிமணி
Updated on

துணை ஆட்சியர் ( Deputy Collector) பணிக்கு 18 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரைக்கும் ஊதிய விகிதம் அளிக்கப்படும். 1.7.2020ம் தேதியின்படி 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்கிற பொதுப்பிரிவினர் விண்ணப்பிக்கலாம். இதர பிரிவினர்களுக்கு 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

டி.எஸ்.பி (Deputy Superintendent of Police) வேலைக்கு 19 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று, பணிக்குத் தகுந்த உடற் திறனும் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரைக்கும் ஊதியவிகிதம் அளிக்கப்படும். 1.7.2020ம் தேதியின்படி 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்கிற பொதுப்பிரிவினர் விண்ணப்பிக்கலாம். இதர பிரிவினர்களுக்கு 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வணிகவரித்துறையில் Assistant Commissioner வேலைக்கு 10 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வணிகவியல் மற்றும் சட்டப் பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்தப் பணிக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரைக்கும் ஊதியவிகிதம் அளிக்கப்படும். 1.7.2020ம் தேதியின்படி 21 வயது முதல் 33 வயதிற்குள் இருக்கிற பொதுப்பிரிவினர் விண்ணப்பிக்கலாம். இதர பிரிவினர்களுக்கு 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தமிழக கூட்டுறவுத் துறையில் Deputy Registrar வேலைக்கு 14 காலியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரைக்கும் ஊதியவிகிதம் அளிக்கப்படும். 1.7.2020ம் தேதியின்படி 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்கிற பொதுப்பிரிவினர் விண்ணப்பிக்கலாம். இதர பிரிவினர்களுக்கு 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கிராமப்புற வளர்ச்சி துறையில் Assistant Director வெலைக்கு 7 காலியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் Rural Service பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கும், Sociology பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் அல்லது டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்தப் பணிக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரைக்கும் ஊதியவிகிதம் அளிக்கப்படும். 1.7.2020ம் தேதியின்படி 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்கிற பொதுப்பிரிவினர் விண்ணப்பிக்கலாம். இதர பிரிவினர்களுக்கு 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையில் District Officer வேலைக்கு ஒரு காலியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரைக்கும் ஊதியவிகிதம் அளிக்கப்படும். 1.7.2020ம் தேதியின்படி 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்கிற பொதுப்பிரிவினர் விண்ணப்பிக்கலாம். இதர பிரிவினர்களுக்கு 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தமிழ்நாட்டில் 69 ‘குரூப்- 1’ காலிப்பணியிடங்கள் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு என இரண்டு கட்டங்களாக எழுத்து தேர்வு நடத்தப்படும்.

www.tnpsc.gov.in எனும் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 19.

banner

Related Stories

Related Stories