industries and Commerce துறையில் டெக்னிக்கல் பிரிவில் Assistant Director வேலைக்கு 11 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Civil engineering, Architectural Engineering பாடப்பிரிவுகளைத் தவிர்த்து, இதர பொறியியல் பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டப் படிப்பு முடித்து, ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரைக்கும் ஊதியவிகிதம் அளிக்கப்படும். பொதுப்பிரிவினருக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு வயது உச்சவரம்பு கிடையாது.
Chemical Wing பிரிவில் Assistant Superintendent வேலைக்கு ஒரு காலியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க , Chemical Engineering பாடப்பிரிவில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரைக்கும் ஊதியவிகிதம் அளிக்கப்படும். பொதுப்பிரிவினருக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு வயது உச்சவரம்பு கிடையாது.
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்து தேர்வு, Assistant Director வேலைக்கு 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதியும், Assistant Superintendent வேலைக்கு 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் தேதியும் நடைபெறும்.
www.tnpsc.gov.in எனும் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜனவரி 8.