இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்தது விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் : முழு விவரம் என்ன ?

ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்தது விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் : முழு விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கியது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே டாட்டாவின் கைவசம் இருந்த விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் அந்த இணைப்பு முறைப்படி அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதை அடுத்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானங்கள், இன்று முதல், ஏர் இந்தியா விமானமாக வானில் பறக்கத் தொடங்கியுள்ளது. சென்னை விமான நிலையத்தை பொருத்தவரையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து, டெல்லி, மும்பை ஆகிய இரண்டு பெருநகரங்களுக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், விமான சேவைகளை இயக்கி வந்தது.

இன்று காலை முதல், அந்த விமான சேவைகள் அனைத்தும் ஏர் இந்தியா விமானங்களாக இயங்கத் தொடங்கியுள்ளன. மேலும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்திற்கு கோடு வார்த்தை (UK) யூ கே என்று இருந்தது. அது இன்று காலையில் இருந்து, ஏ ஐ என்று மாற்றப்பட்டுள்ளது. அதோடு விமானத்தின் எண்கள் 3 இலக்கத்தில் (டிஜிட்டல்) இருந்து, 4 இலக்கத்தில் (டிஜிட்டல்) மாற்றப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்தது விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் : முழு விவரம் என்ன ?

உதாரணமாக சென்னையில் இருந்து காலை 6.45 மணிக்கு, மும்பை செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இதுவரையில் யு கே 828 என்ற எண்ணுடன் இயங்கி வந்தது. இன்று முதல் அந்த விமானம் ஏ ஐ 2828 என்ற எண்ணாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரம் புறப்படும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. விமான எண்கள் மாற்றம் குறித்து, முன்பதிவு செய்து இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விமானங்களில் விஸ்தாரா என்ற பெயர் தான் உள்ள நிலையில் அதுவும் நாளடைவில் ஏர் இந்தியா என்று மாறிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories