இந்தியா

டாக்ஸி புக்கிங்கை Cancel செய்த பெண் மருத்துவர் : ஆத்திரத்தில் Taxi ஓட்டுநர் செய்த செயலால் அதிர்ச்சி !

டாக்ஸி புக்கிங்கை Cancel செய்த பெண் மருத்துவர் : ஆத்திரத்தில் Taxi ஓட்டுநர் செய்த செயலால் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள நவீன காலத்தில் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்கள் தேவைகளை எளிதாக எடுத்துக்கொள்ள முடிகிறது. அதில் முக்கியமானது போக்குவரத்து. ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற ஆப்கள் மூலம் பலரும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக செல்ல முடிகிறது. இதுபோன்ற சேவைகளை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக இந்த சேவைகள், பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக அமைகிறது. அதே வேளையில் சில நேரங்களில் ஆபத்தாகவும் முடிகிறது. டேக்ஸி, ஆட்டோ, பைக் போன்றவைகளில் பயணிக்கும் பெண்கள் மீது ஒரு சிலர் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பைக்-டாக்ஸி புக் செய்த பெண் மருத்துவர், அதனை கேன்சல் செய்த பிறகு, அதன் ஓட்டுநர் ஆபாச வீடியோ அனுப்பியுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாக்ஸி புக்கிங்கை Cancel செய்த பெண் மருத்துவர் : ஆத்திரத்தில் Taxi ஓட்டுநர் செய்த செயலால் அதிர்ச்சி !

மேற்கு வங்கம், கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஒருவர் தனது பணியை முடித்து இரவு நேரத்தில் வீட்டுக்கு செல்வதற்காக பைக்-டாக்ஸி புக் செய்துள்ளார். அந்த பெண் புக் செய்து நீண்ட நேரம் காத்திருக்கு வேண்டிய சூழலல் இருந்ததால் அதனை ரத்து செய்து வேறு புக் செய்ய எண்ணியுள்ளார்.

அதன்படி அந்த பெண் மருத்துவர் ரத்து செய்த சில மணி நேரங்களிலேயே அந்த பெண்ணின் மொபைல் எண்ணை அழைத்த ஓட்டுநர், அவரை மிரட்டியுள்ளார். சுமார் 17 முறை அந்த பெண் மருத்துவருக்கு ஃபோன் செய்து தொல்லைக் கொடுத்துள்ளார். மேலும் அவருக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி அவதூறாக பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் மருத்துவர், உடனடியாக இதுகுறித்து ஆன்லைனில் போலீஸில் புகார் அளித்ததோடு, இ-மெயில் மூலமும் புகார் தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் அந்த ஓட்டுநரை தேடி வந்த போலீஸார், அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

banner

Related Stories

Related Stories