ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருப்பத்தியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 AC வகுப்பில் குடும்பத்துடன் பயணம் செய்துள்ளார்.
அப்போது, அவர் பயணம் செய்த ரயில் பெட்டியின் கழிவறை மிகவும் மோசமாக இருந்துள்ளது. மேலும் தண்ணீர் வசதிகூட இல்லாமல் இருந்துள்ளது. இது குறித்து ரயில்வே ஊழியர்களிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பின்னர் ரயில் துவ்வாடா ரயில் நிலையத்தில் நின்றபோது அங்கிருந்த ரயில்வே அதிகாரியிடம் புகார் கூறியுள்ளார். ஆனால் அவர்களும் கண்டும் காணாமல் இருந்துள்ளனர்.
இதனையடுத்து விசாகப்பட்டினம் நுகர்வோர் நீதிமன்றத்தில் மூர்த்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பயணிக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டுள்ளது.