இந்தியா

கிரெடிட் கார்டு பயனர்கள் கவனத்திற்கு : இன்று முதல் அமலுக்கு வந்துள்ள ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்!

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன

கிரெடிட் கார்டு பயனர்கள் கவனத்திற்கு : இன்று முதல் அமலுக்கு வந்துள்ள ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை, கிரெடிட் கார்டு பயன்பாடு, நிரந்தர வைப்பு நிதி போன்றவை தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதன் விவரம் வருமாறு:-

ஒருமாத பில்லிங்கில் மின்கட்டணம் போன்ற சேவைகளுக்காக செலுத்தும் கட்டணம் ரூ.50,000க்கும் மேல் இருந்தால் கூடுதலாக 1% கட்டணம் விதிக்கப்படும்.

மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும் இந்தியன் வங்கியின் சிறப்பு நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கு கடைசிநாள் நவ.30 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எஸ்பிஐ கார்டில் ரிவார்டு புள்ளிகளின் செல்லுபடியாகும் காலம் மாற்றப்பட்டுள்ளது. இனிமேல் அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்

நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் EMI உடன் கொள்முதல் செய்கிறீர்கள் என்றால், இனிமேல் கூடுதல் கட்டணங்கள் இருக்கும் உள்ளிட்ட விதிகள் மாற்றப்பட்டுள்ளது. இந்த விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அதேபோல், வங்கிகள் மட்டுமின்றி ரயில்வே துறையிலும் முன்பதிவு செய்வதற்கான காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories