இந்தியா

டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை! : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை! : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்திய தலைநகரான டெல்லியில் காற்று மாசு, வழக்கத்தை விட அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக, மூச்சு சிக்கல்களால் துன்புறும் நோயாளிகளின் எண்ணிக்கையும், சுமார் 40% அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்தியா முழுக்க பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்படும் தீப ஒளி திருநாள் நெருங்கிக் கொண்டிருப்பதால், நாடு முழுவதும் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது.

டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை! : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஏற்கனவே, காற்று மாசுவால் தத்தளித்து கொண்டிருக்கும் டெல்லியில், பட்டாசு வெடிப்பு அரங்கேறினால், மக்கள் கடுமையாக பாதிக்க நேரிடும் என பல்வேறு தரப்பிலிருந்து எச்சரிக்கைகள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, “ஜனவரி 1 வரை, டெல்லியின் எந்த பகுதியிலும் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது” என்றும், “பட்டாசு கிடங்குகளுக்கு சீல் வைக்க வேண்டும்” என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, டெல்லி அரசும், பட்டாசு விற்பனைக்கான தடையை அறிவித்தது. இதன் வழி, டெல்லியின் காற்று மாசு நிலை, மேலும் அதிகரிக்க வாய்ப்பு குறைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories