இந்தியா

ஒரு வாரத்தில் 34 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் : ரூ.3 கோடி இழப்பு!

இந்தியாவில் ஒரு வாரத்தில் மட்டும் 34 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒரு வாரத்தில் 34 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் : ரூ.3 கோடி இழப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

துபாயில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி ஏர் இந்தியா விமானம் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஜெய்பூர் விமானநிலைய போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பின்னர் விமானம், விமான நிலையம் வந்தவுடனே பணிகள் பத்திரமாக இறக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. ஆனால் விமானத்தில் சந்தேகத்திற்குரிய எந்த பொரும் இல்லை.பிறகு வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரியவந்தது.

இதேபோல் டெல்லியில் இருந்து லண்டணுக்கு சென்ற விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விந்துள்ளது. இந்த விமானத்தைல் சோதனைக்கு பிறகும் இதுவும் போலியான மிரட்டல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 34 விமானங்களுக்கு போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டில் விடுத்தவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஒரு விமானத்துக்கு 3 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories