இந்தியா

”ரயில் விபத்துகளுக்கு பொதுமக்கள்தான் காரணம்” : பழிபோடும் ஒன்றிய பா.ஜ.க அமைச்சர்!

ரயில் விபத்துகளுக்கு பொதுமக்கள்தான் காரணம் என ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

”ரயில் விபத்துகளுக்கு பொதுமக்கள்தான் காரணம்” : பழிபோடும் ஒன்றிய பா.ஜ.க அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ரயில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 20 ரயில் விபத்துகள் நடந்துள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளது.

ரயில் விபத்துகளை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகில் லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு இரயில் மீது நேற்று இரவு மைசூரிலிருந்து பீகார் மாநிலம் தர்பாங்கா செல்லும் பாக்மதி அதிவிரைவு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், ரயில் விபத்துகளுக்கு பொதுமக்கள்தான் காரணம் என ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய அமைச்சர் லாலன் சிங் ”ரயில் விபத்துகள் வழக்கமாகிவிட்டது. தண்டவாளத்தில் மக்கள் எதையாவது வைப்பதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் மீது பழிபோடும் ஒன்றிய அமைச்சருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories