டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு பல்வேறு சதிச் செயல்களில் ஒன்றிய பா.ஜ.க அரசு ஈடுபட்டு வருகிறது. அதில் மதுபான கொள்கை வழக்கு.
இதில் அரவிந்த் கெஜ்ரிவாலை சிக்கவைத்து அமலாக்கத்துறையை கொண்டு கைது செய்தது பா.ஜ.க. பின்னர் ஜாமினில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், ”டெல்லியில் சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது. ஆனால் மக்களின் தீர்ப்பை தெரிந்துக்கொள்ளாமல் முதலமைச்சர் நாற்காலியில் அமரமாட்டேன்” என முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியின் முதலமைச்சராக அதிஷி மர்லேனா பெற்றுள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் அதிஷி குடியேற இருந்த அரசு இல்லத்திற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளது ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
துணை நிலை ஆளுநரின் தலையீடு காரணமாகவே வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். பா.ஜ.கவின் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், "27 ஆண்டுகளாக வெற்றி பெற முடியாத பா.ஜ.க மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசாங்கத்தின் அதிகாரத்தை பறிக்கிறது. நவராத்திரியின் போது பெண் முதலமைச்சரின் உடைமைகளை வீசி ஏறித்துள்ளார்கள். பெண்களுக்கு எதிரான பா.ஜ.கவின் மனநிலை மீண்டும் இது காட்டுகிறது.” என தெரிவித்துள்ளார்.