இந்தியா

9 இலட்சம் மக்களுக்கு மறுக்கப்பட்ட ஆதார்! : உரிமையும், சலுகையும் தராமல் இழுத்தடித்த பா.ஜ.க!

பா.ஜ.க முன்னெடுத்திருக்கிற NRC உள்ளிட்ட பல உரிமை பறிப்பு நிகழ்வுகள் இன்றளவும் தொடர்ந்து வருகின்றன.

9 இலட்சம் மக்களுக்கு மறுக்கப்பட்ட ஆதார்! : உரிமையும், சலுகையும் தராமல் இழுத்தடித்த பா.ஜ.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

பா.ஜ.க ஆளும் அசாம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேடு (NRC) சுமார் 19 இலட்சம் பேரை குடியுரிமையற்றவர்களாக மாற்றியது மட்டுமல்லாது, சுமார் 9 இலட்சம் மக்களிடம் உரிமை பறிப்புகளிலும் ஈடுபட்டுள்ளது.

NRC நடைமுறைப்படுத்தம் என்கிற பெயரில், ஆண்டுக்கணக்கில் சுமார் 9 இலட்சம் மக்களுக்கு ஆதார் அட்டை மறுக்கப்பட்டு வந்துள்ளது.

ஆதார் அட்டை மறுக்கப்பட்டதால், அரியானா மாநில அரசு வழங்கும் உதவித்தொகையும், இதர சலுகைகளும் அம்மக்களுக்கு மாநில பா.ஜ.க அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

9 இலட்சம் மக்களுக்கு மறுக்கப்பட்ட ஆதார்! : உரிமையும், சலுகையும் தராமல் இழுத்தடித்த பா.ஜ.க!

இதற்கு, மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த போதும், அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்காமல், நீண்டகாலத்திற்கு பிறகு கவனக்குறைவு ஏற்பட்டுள்ளது என்ற சமாளிப்புடன், கடந்த மாதம் ஆதார் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது அசாம் பா.ஜ.க அரசு.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் எளிதில் முடியவேண்டிய பணியை, இவ்வளவு காலம் தாமதமாக்கி, சலுகை மற்றும் உரிமை புறக்கணிப்பில் ஈடுபட்ட அசாம் அரசிற்கு எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம் என ஆதார் இணைப்பு பெற்றவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும், பா.ஜ.க முன்னெடுத்திருக்கிற NRC உள்ளிட்ட பல உரிமை பறிப்பு நிகழ்வுகள் இன்றளவும் தொடர்ந்தே வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories