இந்தியா

தென் அமெரிக்காவில் வந்தே பாரத்? : பெரு நாட்டின் வண்டியை வந்தே பாரத் எனக் குறிப்பிட்ட ஒன்றிய அமைச்சர்!

அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள காணொளியில், வந்தே பாரத் என்று குறிப்பிட்டு, தென் அமெரிக்கா கண்டத்தின் பெரு நாட்டில் உள்ள வண்டியின் காட்சியைப் பயன்படுத்தப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

தென் அமெரிக்காவில் வந்தே பாரத்? : பெரு நாட்டின் வண்டியை வந்தே பாரத் எனக் குறிப்பிட்ட ஒன்றிய அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் இல்லாத ஒன்றை இருப்பதாக கூறுவது, தற்போது ரயில்வே துறையிலும் தொடங்கியுள்ளது.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கலவரங்களும், பெண்களுக்கு எதிரான அநீதிகளும் உச்சம் தொட்டு வரும் வேளையில், அமைதிக்காவும், பெண்களின் வளர்ச்சிக்காகவும் தான் பா.ஜ.க செயல்படுகிறது என பொய் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்படுவது போல, தற்போது மற்ற நாட்டின் தொடர்வண்டியை, இந்தியாவின் வந்தே பாரத் என்று பொய் பரப்பல் செய்திருக்கிறார் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.

அவ்வாறு, அஷ்வினி வைஷ்ணவ் தனது X வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், வந்தே பாரத் என்று குறிப்பிட்டு, தென் அமெரிக்கா கண்டத்தின் பெரு நாட்டில் உள்ள வண்டியின் காட்சியைப் பயன்படுத்தியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

இதனை Fact checker முகமது சுபைர் கண்டறிந்து, ஒன்றிய ரயில்வே அமைச்சர் வெளியிட்டுள்ள காணொளியில் இடம்பெற்றிருக்கிற வண்டி, பெரு நாட்டில் 4 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து செயல்பட்டு வரும் வண்டி தான் என உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனால், ஒன்றிய பா.ஜ.க அரசின் மீதான நம்பிக்கை மேலும் சிதைந்துள்ளது. தவறான காணொளி பகிரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்ட நிலையிலும், ஒன்றிய ரயில்வே அமைச்சர் இதுவரை, அப்பதிவை நீக்காதது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories