இந்தியா

”பா.ஜ.கவின் சதியை முறியடிப்பேன்” : கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சித்தராமையா அதிரடி பேச்சு!

எந்த தவறும் செய்யாத என்னை பா.ஜ.க வீழ்த்த பார்கிறது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

”பா.ஜ.கவின் சதியை முறியடிப்பேன்” : கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சித்தராமையா அதிரடி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2021 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியின் போது கார்நாடக மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் முதலமைச்சர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் முறைகேடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆளுநருக்கு, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளன. இந்த மனுவை தொடர்ந்து, சித்தராமையாவுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் நோட்டீஸ் அனுப்பினார்.பின்னர் முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து தன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கிய ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் சித்தராமையா மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதலமைச்சர் சித்தராமையா மீதான வழக்கை விசாரிக்க தடையில்லை என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்,பா.ஜ.கவின் சதியை முறியடிப்பேன் என முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "நான் ராஜினாமா செய்ய காத்திருக்கிறீர்களா?. எந்த தவறும் செய்யாத என்னை வீழ்த்த சதி செய்கிறீர்கள். இது சாத்தியமற்றது. நான் போராட்ட அரசியலில் இருந்து வந்தவன், உங்களின் சதியை முறியடிப்பேன்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories