இந்தியா

மின்சாரம் விநியோகத்திற்கான டெண்டர் அதானிக்கு ஒதுக்கீடு : பணக்காரர்களுக்காக மக்களை நசுக்கும் பா.ஜ.க அரசு!

மகாராஷ்டிராவில் மின்சாரம் விநியோகத்திற்கான டெண்டர் அதானி குழுமத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் விநியோகத்திற்கான டெண்டர் அதானிக்கு ஒதுக்கீடு : பணக்காரர்களுக்காக மக்களை நசுக்கும் பா.ஜ.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அதானி, அம்பானிகளின் சொத்து மதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரயில்வே, விமான நிலையம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை அதானிக்கு ஒன்றிய அரசு விற்று வருகிறது.

மேலும் நிலக்கரி உரிமம் ஆகியவற்றை முறைகேடாக ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. கடந்த ஆண்டு அதானியின் முறைகேடுகளை ஹிண்டர்பர்க் வெளியிட்டது. இது நாட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றத்தில் கூட, அதானி ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதுவரை பிரதமர் மோடி அதானி, அம்பானி குறித்து வாய்திறக்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் மின்சாரம் விநியோகத்திற்கான டெண்டர் அதானி குழுமத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங், ”பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிராவில் மின்சார விநியோகத்திற்கான டெண்டர் சமீபத்தில் அதானிக்கு வழங்கப்பட்டது. நாடு முழுவதும் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 முதல் 3 வரை மின்சாரம் கிடைக்கும் நிலையில், அதானி நிறுவனம் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.4 என்ற விலையில் வழங்குகிறது. மகாராஷ்டிர மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து யூனிட்டுக்கு ரூ.1 என்கிற அளவில் கொள்ளை நடக்கிறது. நாளை இது நாடு முழுவதும் அரங்கேறும்." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories