இந்தியா

மோடியின் அரசியல் சரி என்று நீங்கள் கருதுகிறீர்களா? : RSS தலைவருக்கு 5 கேள்விகளை எழுப்பிய கெஜ்ரிவால்!

RSS தலைவருக்கு 5 கேள்விகளை அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பியுள்ளார்.

மோடியின் அரசியல் சரி என்று நீங்கள் கருதுகிறீர்களா? : RSS தலைவருக்கு 5 கேள்விகளை எழுப்பிய கெஜ்ரிவால்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், நான் திருடனா? அல்லது பா.ஜ.க திருடனா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மக்களிடம் சென்று என நேர்மையை கேட்டுப்பாருங்கள்.

என்னையும், சிசோடியாவையும் ஆம் ஆத்மி கட்சியையும் ஊழல்வாதிகளாக சித்தரிக்க பார்கிறார்கள். என் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிப்பேன்.

RSS தலைவர் மோகன் பகவத்துக்கு 5 கேள்விகளை எழுப்புகிறேன். அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் மற்ற கட்சிகளை உடைப்பது, அரசாங்கங்களைக் கவிழ்ப்பது ஆகிய பிரதமர் மோடியின் அரசியல் சரி என்று நீங்கள் கருதுகிறீர்களா?

ஊழல் தலைவர்கள் என்று பிரதமர் மோடியால் விமர்சிக்கப்பட்ட பலர், பாஜகவில் சேர்ந்துள்ளார்கள். இத்தகைய அரசியலை நீங்கள் ஏற்கிறீர்களா?.பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவரான நீங்கள் தவறான செயல் களில் இருந்து பிரதமர் மோடியை தடுத்தீர்களா?

வயது வரம்பு விஷயத்தை கருத்தில் கொண்டு எல்.கே. அத்வானிக்கு ஓய்வு கொடுத்ததைப் போல் மோடிக்கும் ஓய்வு கொடுக்கப் படுமா?. பாஜகவின் தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா, சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் தற்போது கட்சிக்கு தேவையில்லை என்று கூறியபோது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்?” இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories