இந்தியா

இஸ்லாமிய மக்களை அவமதித்த விவகாரம் : பகிரங்க மன்னிப்பு கேட்ட கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி!

இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என அழைத்த விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.

இஸ்லாமிய மக்களை அவமதித்த விவகாரம் : பகிரங்க மன்னிப்பு கேட்ட கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா நிலம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது பெண் வழக்க றிஞரிடம்,”கோரிபால்யாவில் இருந்து மார்க்கெட் வரை உள்ள மைசூரு மேம் பாலம் பாகிஸ்தானில் உள்ளது. அது இந்தியாவில் இல்லை என்பதால் இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும், உத்தரவு பிறப்பிக்கவும் பொருந்தாது” என அவர் கூறினார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புற நகர் பகுதியான கோரிபால்யா முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி என்ற நிலையில், அந்த பகுதியை “பாகிஸ்தான்” பகுதி என நீதிபதி ஸ்ரீஷானந்தா கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு கண்டனம் தெரிவித்து,”கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் உரிய விவரங்களை பெற்று, உச்சநீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.

இந்நிலையில், சனியன்று மதியம் நீதி மன்ற நடவடிக்கைகள் தொடங்கும் நீதிபதி ஸ்ரீஷானந்தா,”நீதித்துறையின் நடவடிக்கையின் போது சில கருத்துக்கள் சமூக ஊடகங்களில் சொல்லப்பட்ட கருத்துக்கு மாறாக செய்தியாக்கப்பட்டிருக்கிறது.

அந்த கருத்துக்கள் எந்த ஒரு தனிநபரையோ, சமூகத்தின் எந்த ஒரு பிரிவினரையோ புண்படுத்தும் நோக்கத் தில் தெரிவிக்கப்பட்டது இல்லை. அந்த கருத்துக்கள் எந்த ஒரு தனிநபரையோ, சமூகத்தையோ, சமூகத்தின் எந்த வொரு பிரிவினரையோ காயப்படுத்தியிருந்தால், நான் மனப்பூர்வமாக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

banner

Related Stories

Related Stories