இந்தியா

பெட்ரோல் விலை - மக்களிடம் இருந்து ரூ.35 லட்சம் கோடியை வழிப்பறி செய்த மோடி அரசு : மல்லிகார்ஜூன கார்கே!

கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்க மறுக்கிறது

பெட்ரோல் விலை - மக்களிடம் இருந்து ரூ.35 லட்சம் கோடியை  வழிப்பறி செய்த மோடி அரசு : மல்லிகார்ஜூன கார்கே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தே வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.60க்கு கீழ் இருந்தது. ஆனால் பா.ஜ.க வந்த பிறகு பெட்ரோல் விலை ரூ.100 கடந்தது.

கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் விண்ணை தொடும் அளவிற்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எல்லாம் பல்வேறு மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது.

பின்னர் நாடாளுமன்ற தேர்தலுக்காக பெட்ரோல் விலை ரூ.2 ஒன்றிய அரசு குறைத்தது. பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமரா பதவியேற்ற பிறகு கூட பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை.

இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காதது ஏன்? என இந்தியா கூட்டணி கட்சி கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே,”கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்க மறுக்கிறது. தற்போதைய சந்தை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.48.27க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.69க்கும் விற்கப்பட வேண்டும். ஆனால் விலையை குறைக்காமல் மக்களிடம் இருந்து எரிபொருள் வரியாக ரூ.35 லட்சம் கோடியை மோடி அரசு வழிப்பறி செய்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

அதேபோல், ”10 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை சரிந்தபோதும் பெட்ரோல் விலை 30% அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்காதது ஏன்?” திரிணாமூல் காங்கிரஸ் MP டெரிக் ஓ பிரையன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

banner

Related Stories

Related Stories