இந்தியா

“NEP-ன் ஆக்கக் கோட்பாடுகளுக்கு முன்னோடி தமிழ்நாட்டின் கல்வி!” - தர்மேந்திரனுக்கு அமைச்சர் அன்பில் பதிலடி!

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்விகளுக்கு, அடுக்கடுக்கான விடைகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

“NEP-ன் ஆக்கக் கோட்பாடுகளுக்கு முன்னோடி தமிழ்நாட்டின் கல்வி!” - தர்மேந்திரனுக்கு அமைச்சர் அன்பில் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டிற்காக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல், வேண்டும் என்றே பழிவாங்கி வருகிறது. மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் தொடங்கி கல்வி திட்டங்களுக்கான நிதி என பல திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் நிறுத்திவைத்துள்ளது மோடி அரசு.

அதிலும் குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தமிழ்நாட்டு மக்கள் முற்றிலுமாக புறக்கணித்து விட்டதை அடுத்து ஒன்றிய பட்ஜெட்டில் கூட தமிழ்நாட்டின் பெயரை இடம் பெறாமல் பார்த்துக் கொண்டது பா.ஜ.க.

அவ்வரிசையில், தற்போது PM SHRI திட்டத்தில் கையெழுத்திட்டால் தான் “சமக்ரா சிக்‌ஷா” என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய முதல் தவணையான ரூ. 573 கோடியை விடுவிப்போம் என ஒன்றிய பா.ஜ.க அரசு அடம்பிடித்து வருகிறது.

“NEP-ன் ஆக்கக் கோட்பாடுகளுக்கு முன்னோடி தமிழ்நாட்டின் கல்வி!” - தர்மேந்திரனுக்கு அமைச்சர் அன்பில் பதிலடி!

அதற்கு விடையாக, “PM SHRI திட்டத்தில் முன்மொழியப்படுகிற தேசிய கல்விக்கொள்கையை ஒருபோதும் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காதது குறித்து ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்விகளை அடுக்கினார்.

அதன் தொடர்ச்சியாக, ஒன்றிய அமைச்சரின் கேள்விகளுக்கு அடுக்கடுக்கான விடைகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து, அமைச்சர் அன்பில் மகேஸ் தனது X சமூக வலைதளத்தில், “தமிழ் மொழி எங்களின் அடையாளம். 1930 - 1960 கால கட்டங்களில் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட போராட்டங்களே அதற்கு சான்று. எங்களின் அடையாளமான தமிழை தாங்கிப்பிடித்து, ஆங்கில திறனையும் எதிர்கால தலைமுறையினருக்கு தடையின்றி வழங்கி வருகிறோம்.

“NEP-ன் ஆக்கக் கோட்பாடுகளுக்கு முன்னோடி தமிழ்நாட்டின் கல்வி!” - தர்மேந்திரனுக்கு அமைச்சர் அன்பில் பதிலடி!

தமிழை முதன்மை மொழியாக கொண்டு, ஆங்கிலத்திறனை மாணவர்களிடையே அதிகரிக்கும் வகையிலும் தான் எங்கள் கல்விக் கொள்கை அமைந்துள்ளது.

போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழியையும் உள்ளடக்கி, மக்களுக்கு அந்நியமற்ற வகையில் தேர்வுகள் நடத்திட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்.

பொறியியல், மருத்துவம் என முன்னணி கல்வி சார்ந்த புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவருகின்றன.

தமிழ்நாடு அரசின் திட்டங்களான முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி, தமிழ்ப்புதல்வன், எண்ணும் எழ்த்தும் ஆகியவை, தேசிய கல்விக்கொள்கையின் கோட்பாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கின்றன.

“NEP-ன் ஆக்கக் கோட்பாடுகளுக்கு முன்னோடி தமிழ்நாட்டின் கல்வி!” - தர்மேந்திரனுக்கு அமைச்சர் அன்பில் பதிலடி!

இவ்வாறு, தேசிய கல்விக்கொள்கையில் முன்மொழிகிற ஆக்க செயல்கள் பலவற்றை, ஏற்கனவே செயல்படுத்திக் கொண்டிருக்கிற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. எனினும், மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட வரையறைகள் எங்கள் நிலைப்பாட்டிற்கு எதிரானது என்பதால் தேசிய கல்விக்கொள்கையை நாங்கள் ஒருபோதும் ஏற்க தயாராக இல்லை.

எனவே, சமக்ரா சிக்‌ஷா (Samagra Shiksha) திட்டத்தின் கீழ் நிதி வழங்கலை தாமதிக்காமல், கட்டுப்பாடுகளின்றி உடனடியாக தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories