இந்தியா

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - அபராஜிதா மசோதா 2024 கூறுவது என்ன?

மேற்கு வங்க சட்டப்பேரவையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிமுகப்படுத்திய “அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் மசோதா 2024” என்ற சட்ட மசோதா நிறைவேறியது.

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - அபராஜிதா மசோதா 2024 கூறுவது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவனையில் இளநிலைப் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாட்டில் பல்வேறு பகுதிகளில் போராட்டமும் வெடித்தது. இதனையடுத்து மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் கண்காணிப்பு மற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என ஒன்றிய அரசும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 20க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இன்று மேற்கு வங்க சட்டப்பேரவையில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சட்டத்திருத்தை முன்மொழிந்தார்.

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - அபராஜிதா மசோதா 2024 கூறுவது என்ன?
PRINT-91

மேற்கு வங்க சட்டப்பேரவையில் அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் மசோதா 2024 என்ற சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். பின்னர் இந்த மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மசோதாவில் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தண்டனையில் இருந்து கூடுதல் தண்டனையை பெற்றுத்தர வழிவகை உள்ளது என்றும் மம்தா தெரிவித்துள்ளார்.

அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் மசோதா 2024

குறிப்பாக ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 உள்ளிட்ட தேசிய சட்டங்களில் விதிக்கப்பட்டு தண்டனையில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.

மரண தண்டனை

மேலும் இந்தச் சட்டமசோதாவில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் உயிரிழந்தாலோ அல்லது மூளைச் சாவு அடைந்தாலோ, கோமா நிலைக்குச் சென்றாலோ தொடர்புடைய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

ஆயுள் தண்டனை

பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகளில் குற்றம் நிரூப்பிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - அபராஜிதா மசோதா 2024 கூறுவது என்ன?

ஒருமுறை பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெறுபவர் மீண்டும் அதே குற்றத்தை செய்தால் கடுமையான அபராத்துடன் மரண தண்டனை விதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி ஒன்றிய அரசின் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் 2023ல் பல்வேறு பிரிவுகளின் கீழ் அபராஜிதா மசோதா திருத்தங்கள் செய்துள்ளது.

பிரிவுகள் மாற்றம்

அதில், பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை செய்து கொலை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துதல் மற்றும் பெண்கள் மீது அமில வீச்சு உள்ளிட்ட குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கும் விதமாக, 64, 70(1), 71(1). 72(1), 73, 124(1) மற்றும் 124(2) ஆகிய பிரிவுகளின் கீழ் மாற்றம் செய்யப்படும்.

21 நாட்களில் விசாரணை

முதல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய காலக்கொடு நிர்ணயிக்கும் விதமாக 21 நாட்களில் வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என கட்டயமாக்கியுள்ளது. முன்னதாக இதற்கு 2 மாதங்கள் காலக்கெடு இருந்தது.

மேலும் காவல் கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள அதிகாரிகள் உரிய காரணங்களுடன் கேட்டுக்கொண்டால் கூடுதல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - அபராஜிதா மசோதா 2024 கூறுவது என்ன?

அபராஜிதா பணிக் குழுக்கள்

இந்த மசோதா அமலுக்கு வந்தவுடன் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் அபராஜிதா பணிக் குழுக்கள் உருவாக்கப்படும். புதிய சட்டத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை, பெண்கள் மற்றும் குழுந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இந்தக் குழு விசாரணை நடத்தும்.

இந்த பணிக்குழு விசாரிக்கும் வழக்குகளை விரைவாக நடத்தி தீர்ப்பு வழங்குவதற்காக 52 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த மசோதாக் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பான புதிய விதிகளை இச்சட்டத் திருத்தத்தில் திருத்தியமைத்து அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும்.

நாட்டில் உள்ள பெண்களை பாதுகாப்பதற்கான தனிச் சிறப்புச் சட்டத்தை அமல்படுத்த முடியாத பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும். பாலியல் வன்கொடுமை மனித குலத்திற்கு எதிரான ஒரு சாபம். இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க சமூக சீர்திருத்தங்கள் தேவை எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories