தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஆகஸ்ட் 30 ஆம் நாள் முதல் செப்டம்பர் 1 ஆம் நாள் வரை இந்தியாவின் முதல் ஃபார்முலா 4 Night street racing நிகழ்வு நடத்தப்படுவதற்கான பணிகள் இறுதி நிலையை அடைந்துள்ளன.
இதன் மூலம் தெற்காசியாவிலேயே இரவு ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது.
3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் இப்பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த சர்க்யூட் தீவு திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியார் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைந்துள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் எனபது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மட்டுமல்லாமல் தெற்காசியாவிலேயே முதன் முறையாக இரவு நேர கார் பந்தயம் என்பதால் இந்த போட்டிக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பலர் கலந்து கொள்வதால் இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் . இந்நிலையில், தற்போது டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.
இந்த கார் பந்தயத்தை சாலையின் இரண்டு பக்கங்களிலும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நாற்காலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. பந்தயத்தை பார்க்கும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு எந்தவித ஆபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்புகளும் செய்யப்பட்டிருக்கிறது.
சிறிப்பாயும் 50க்கும் மேற்பட்ட ரேஸ் கார்கள் தீவுத்திடலில் தற்போது வந்து இறங்கியுள்ளது.
ரேஸ் கார்கள் போட்டிக்கு தயார் ஆவதற்கான பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.
உலகமே இன்று திரும்பி பார்க்கும் வகையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் வெற்றிக்கரமாக சென்னை சாலைகளை சீறிப்பாய ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறது .