முகேஷ் அம்பானியின் சகோதரனான அனில் அம்பானி, ஒரு காலத்தில் இந்தியாவின் முதல் பணக்காரராக விளங்கினார். ஆனால் தவறான முதலீடு மற்றும் வர்த்தக திட்டங்கள் காரணமாக அவரது நிறுவனம் தொடர்ந்து பெரும் பின்னடைவை சந்தித்தது.
இதன் காரணமாக தனது பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். எனினும் அவர் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்த ரிலையன்ஸ் நேவல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனமும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கிளை அமைப்பாகச் செயல்படும் ஜி.சி.எக்ஸ் - GCX நிறுவனமும் கடும் சரிவை சந்தித்தது.
ஒரு கட்டத்தில் தொழில் நஷ்டம் காரணமாக 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், தான் வாங்கிய கடனை திரும்ப அடக்கமுடியாமல் திணறிய அனில் அம்பானி லண்டன் நீதிமன்றத்தில் தனது சொத்து மதிப்பு பூஜ்யம்தான் என்று கூறும் அளவு அவரின் நிலை சென்றது.
இந்த நிலையில், தற்போது அவருக்கு மற்றொரு பின்னடைவாக பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டு தடை விதித்து செபி உத்தரவிட்டுள்ளது. தனது நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக அனில் அம்பானி மீது புகார் எழுந்தது.
இதனை விசாரித்த செபி அமைப்பு, அந்த குற்றசாட்டுகளை உறுதிசெய்ததுடன் பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு 25 கோடி அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது.