தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் இணைய, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படுவது போல, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5% இடஒதுக்கீடு கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் மருத்தவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ள இடஒதுக்கீட்டிலும், பொதுப்பிரிவிலும் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்தது.
இதனைத் தொடர்ந்து, வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு எதிராக மத்தியப் பிரதேச தன்னார்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதனை விசாரணைக்கு எடுத்த, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி. ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு, “மெட்ரிக் மதிப்பெண் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வின் பொதுப்பிரிவில் பங்கு கொள்ள உரிமை உள்ளது” என உத்தரவிட்டனர்.
மேலும், “SC, ST, OBC பிரிவுகளையும் உள்ளடக்கியது தான் பொதுப்பிரிவு. இதனை, ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது” என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.