இந்தியா

கேரளத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் விழா ரத்து! : கேரள முதல்வர் அறிவிப்பு!

அதிகப்படியான உயிர்சேதம், இயல்பு நிலை பாதிப்பு ஆகிய காரணங்களால், கேரள மாநிலத்தில் சுமார் ஒரு வார காலம் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை ரத்து!

கேரளத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் விழா ரத்து! : கேரள முதல்வர் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கேரள மாநிலத்தின் மலைப்பகுதி மாவட்டமான வயநாட்டில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நிலச்சரிவில், மிகப்பெரிய உயிர்சேதம் ஏற்பட்டது.

இதில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழிக்க நேரிட்டது. அதற்கான மீட்புப்பணிகளும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், அறிவிக்க முடியாது என்று ஒன்றிய பா.ஜ.க.வும், தங்களது கருத்துகளில் நிலை கொண்டுள்ளனர்.

இதனிடையே, தமிழ்நாட்டிலிருந்தும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், கேரளத்திற்கு உதவிகள் வழங்கப்பட்டன. கேரள அரசும், மக்களை மீட்பதிலும், இயல்பு நிலையை மீட்டெடுப்பதிலும் முழு கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

கேரளத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் விழா ரத்து! : கேரள முதல்வர் அறிவிப்பு!

இந்நிலையில், அதிகப்படியான உயிர்சேதம், இயல்பு நிலை பாதிப்பு ஆகிய காரணங்களால், கேரள மாநிலத்தில் சுமார் ஒரு வார காலம் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை ரத்து செய்யப்படுவதாக, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இதனால், வழக்கமான கொண்டாட்டம் இல்லாத ஓணத்தை நோக்கி, கேரள மாநிலத்தின் பிற பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories