இந்தியா

”இடஒதுக்கீட்டை பறிக்கிறது பா.ஜ.க” : நேரடி நியமனத்திற்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு!

ஒன்றிய அரசு அதிகாரிகள் பணியிடங்களை, நேரடி நியமனம் மூலம் பட்டியலின, பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

”இடஒதுக்கீட்டை பறிக்கிறது பா.ஜ.க” : நேரடி நியமனத்திற்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள், 35 இயக்குநர்கள், துணைச்செயலாளர்கள் என 45 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்நிலையில்,இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க அரசு பட்டியலின, பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”நேரடி நியமனம் மூலம் காலிப்பணியிடங்களை ஒன்றிய அரசு நிரப்புவது பட்டியலினத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீது நடத்தப்படும் தாக்குதல்.

பாஜகவின் சிதைக்கப்பட்ட ராம ராஜ்ஜியம், அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க முயற்சி மேற்கொள்கிறது.இடஒதுக்கீட்டை பறிக்கிறது." என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ”SC, ST, OBC, EWS இடங்கள் இனி RSS நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இடஒதுக்கீட்டைப் பறித்து அரசியல் சட்டத்தை மாற்றும் பாஜகவின் சக்கரவியூகம் இது.” என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories