இந்தியா

பண்பாடு வேறு - பிரிவினை வேறு! : மத்தியப் பிரதேசத்தில் பண்பாடு என்கிற பெயரில் திணிக்கப்படும் பிரிவினை!

மத நல்லிணக்கத்தையும், அனைவரும் சமமென எண்ணும் முறையையும், இச்சமூகத்தில் வளர வித்திட்டது இந்திய அரசியலமைப்பு. அதனாலேயே, அச்சமத்துவத்தை ஏற்க மறுத்த அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ்.

பண்பாடு வேறு - பிரிவினை வேறு! : மத்தியப் பிரதேசத்தில் பண்பாடு என்கிற பெயரில் திணிக்கப்படும் பிரிவினை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மொழியாலும், பழக்க வழக்கத்தாலும், முன்னோர்களின் வழிகளை பின்பற்றுவதாலும், வரலாறும், அன்பும், அறிவும் வளர வேண்டுமே தவிர, அடிமை எண்ணம் வளர கூடாது என்பதே, கடந்த 1,000 ஆண்டுகால அரசியலில் உணரப்பட்டிருக்கிறது.

அதன் ஒரு பங்காகவே, தன்னுரிமையையும், தான் விரும்பிய மதத்தை தானே தேர்வு செய்யும் முறையையும் அடிக்கோடிட்டு, அரசியலமைப்பில் இடம்பெற செய்துள்ளார் அண்ணல் அம்பேத்கர்.

இந்நடவடிக்கை, மத நல்லிணக்கத்தையும், அனைவரும் சமமென எண்ணும் முறையையும், இச்சமூகத்தில் வளர வித்திட்டது. அதனாலேயே, அச்சமத்துவத்தை ஏற்க மறுத்த அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ்.

பிறப்பின் அடிப்படையில் மக்களிடன் பிரிவினையை உண்டாக்கும் மநு நீதியை தூக்கி பறைசாற்றும் அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ். மேலும், உத்தரப் பிரதேசத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கும், இந்தியாவின் பல பகுதிகளில் சிறுபான்மையினர் உரிமை பறிக்கப்படுவதற்கும் மூலக்காரணமாய் விளங்கும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடங்கி, 98 ஆண்டுகள் ஆகிவிட்டன. 99ஆவது ஆண்டு ஒரு மாதத்தில் நிறைவடைய இருக்கிறது. அதாவது இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே தொடங்கப்பட்ட அமைப்பு இது. அதன், பிரிவினைவாதமும், அத்தகு பழமை கொண்டது தான்.

இங்கு பழமை என்பது பண்பாடு அல்ல! பிரிவினையாகவே காட்சிப்படுகிறது. காரணம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, அனைவரையும் ஆட்சியமைக்க அனுமதிப்பதில்லை. அனைவரையும், அனைத்து உரிமைகளையும் பெற அனுமதிப்பதில்லை. அதற்கு தலைசிறந்த சான்றாக, அண்ணல் அம்பேத்கரையும், இந்திய அரசியலமைப்பையும், தொடக்கம் முதலே சிதைக்க எண்ணும் கூட்டம் தான் ஆர்.எஸ்.எஸ்.

அப்போது வெறும் கூச்சலாக இருந்த எதிர்ப்பு, இப்போது அதிகாரத்தை கைப்பற்றியதன் வழி, சட்டத்திருத்தமாக மாற்றம் கண்டுள்ளது.

பண்பாடு வேறு - பிரிவினை வேறு! : மத்தியப் பிரதேசத்தில் பண்பாடு என்கிற பெயரில் திணிக்கப்படும் பிரிவினை!

சிறுபான்மையினர்களுக்கு உரிமை தருகிற பல்வேறு சட்டங்களில், பா.ஜ.க மாற்றம் கொண்டு வருவதற்கு, ஆர்.எஸ்.எஸ்-ன் கருத்தியல் தான் காரணமாகவும் அமைந்துள்ளது.

பா.ஜ.க.வின் ஆணி வேர் ஆர்.எஸ்.எஸ். இன்று பா.ஜ.க.வில் தலைமை பொறுப்பேற்றிருக்கும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அதானி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் என அனைவரும் ஆர்.எஸ்.எஸ்-ன் உச்சபச்ச பின்பற்றாளர்கள்.

அதன் காரணமாகவே, ஆட்சி வலுவைக் கொண்டு, சட்டத்தை மாற்றினால் போதாது, சிறுபான்மையினரை அடிமைப்படுத்தினால் போதாது, கருத்தியல் திணிப்பு தேவை என்ற எண்ணத்தில், புதிய கல்விக்கொள்கை, மாநில அரசு பாடத்திட்டத்தில் மாற்றம் உள்ளிட்ட பல பிரிவினைவாத செயல்களை முன்னெடுத்து வருகிறது.

அவ்வாறு முன்னெடுக்கப்படும் செயல்களின் தொடர்ச்சியாகவே, மத்தியப் பிரதேசத்தில் உள்ள உயர்கல்வி பாடத்திட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் புத்தகங்களை இடம்பெறவைப்பதும்.

இந்நடவடிக்கை தவறானது என எதிர்க்கட்சிகள் முன்மொழியும் வேளையில், ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கம் பண்பாட்டை வளர்ப்பது தான் என திரித்து பேசி வருகிறது பா.ஜ.க.

அவ்வகையில், பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசத்தின் அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங், “அடுத்த தலைமுறையினருக்கு, நம் கடந்த கால பண்பாட்டை கற்பிப்பது தவறா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன் வழி, ஆர்.எஸ்.எஸ்-ன் அடிப்படை அரசியலான பிரிவினையை, பண்பாடாக்கி மக்களை திசைதிருப்பும் செயல்களை, வரலாற்றாசிரியர்கள், அரசியல் தலைவர்கள் என பலதரப்பட்டோரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories