இந்தியா

தொடர் விமர்சனங்களால் பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு : ஜனநாயகம் வென்றதாக எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சி!

முன்மொழியப்பட்ட ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதாவை (Broadcasting Services Regulation Bill) திரும்பப்பெருவதாக அறிவித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.

தொடர் விமர்சனங்களால் பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு : ஜனநாயகம் வென்றதாக எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மோடி அரசின் கடந்த ஆட்சியில், முன்மொழியப்பட்ட ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதாவை (Broadcasting Services Regulation Bill) திரும்பப்பெருவதாக அறிவித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.

கடந்த நவம்பர் மாதம், ஒன்றிய பா.ஜ.க அரசு முன்மொழிந்த ஒளிபரப்பு சேவைகள் மசோதாவில், இணைய பயன்பாட்டாளர்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், அம்மசோதாவில் மறைமுக தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது. குறிப்பாக, சமூக வலைதளங்களிலும், இணையதளங்களிலும் தன்னிச்சையாக இயங்கும் ஊடகவியலாளர்கள் அனுப்பக்கூடிய மற்றும் பெறக்கூடிய காணொளிகள் (Video), பேச்சுகளில் (Audio) இடையூறு செய்ய ஒன்றிய அரசிற்கு உரிமை தரக்கூடியதாய் ஒளிபரப்பு சேவைகள் மசோதா அமைந்தது.

இணையதள ஊடகங்களும், தன்னுரிமை பெற்றவையாக செயல்பட தடையிடும் வகையில் இம்மசோதாவில் இடம்பெற்ற வரையறைகள் இருந்தன.

தொடர் விமர்சனங்களால் பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு : ஜனநாயகம் வென்றதாக எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சி!

இதனால், மக்களாட்சி நடக்கிற ஒரு நாட்டில் ஊடகங்களை கட்டுப்படுத்த எண்ணும், ஒன்றிய பா.ஜ.க அரசின் எண்ணம், அதிகாரத்துவத்தையும், ஆதிக்க எண்ணத்தையும் நிலைநாட்டுவதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்தன.

அதன் தொடர்ச்சியாக, பலதரப்பட்டோரிடம் மசோதா குறித்த கருத்து கேட்கப்பட்டு, தற்போது சுமார் 9 மாதங்களுக்கு பிறகு, தாங்கள் முன்மொழிந்த ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதாவை திரும்பப்பெறுவதாக தெரிவித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இது குறித்து, திரிணாமுல் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்திரா, “சர்ச்சை மிகுந்த ஒளிபரப்பு சேவைகள் மசோதா நீக்கப்பட்டது, தன்னுரிமை காக்க போராடிய அனைவருக்கும் கிடைக்கப்பெற்ற வெற்றி” என தெரிவித்துள்ளார்.

மூத்த ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய், “இவ்வாறு தான், பலதரப்பட்டவரிடம் கருத்துகள் கேட்டு, நடைமுறைக்கு தகுந்த வகையில் சட்டம் இயற்றுதல் நிகழ வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories