இந்தியா

கடும் எதிர்ப்பு : ஒளிபரப்பு சேவைகள் வரைவு மசோதாவை திரும்ப பெற்ற ஒன்றிய அரசு!

ஒளிபரப்பு சேவைகள் வரைவு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து இம்மசோதா வரைவை ஒன்றிய அரசு திரும்ப பெற்றுள்ளது.

கடும் எதிர்ப்பு : ஒளிபரப்பு சேவைகள் வரைவு மசோதாவை திரும்ப பெற்ற ஒன்றிய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

Facebook, Instagram போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதாவிற்கான வரைவு கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த மசோதா சமூக ஊடகங்களின் குரலை நசுக்குவதற்கான முயற்சி என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும் இம்மசோதா குறித்து டிஜிட்டல் மீடியா நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், இந்த நடவடிக்கை குறித்து தங்களிடம் இதுவரை ஆலோசிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டின. இந்த மசோதா பேச்சு சுதந்திரத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது என்று பல தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து இந்த வரைவு மசோதாவை தற்போது ஒன்றிய அரசு திரும்ப பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே தகவல் ஒளிபரப்பு துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”வரைவு மசோதா மீதான கருத்து கேட்பு அக்டோபர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விரிவான ஆலோசனைக்கு பிறகு புதிய வரைவு மசோதா வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி ஊடகங்கள் பலவும் பா.ஜ.க அரசின் சொல்லுக்கு கட்டுப்பட்டே செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்த நேரத்தில் சமூக ஊடகங்கள்தான் பா.ஜ.க அரசின் தவறுகளை மக்கள் மத்தியில் வெளிச்சம்போட்டு காட்டி வருகிறது. இதை தடுக்கவே ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதாவை ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வரமுயற்சிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories