வங்கதேச நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறையை தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே வெளியேறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார். அதேநேரம் இங்கு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக பாஜக ஆதரவு “கோடி மீடியா” ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த செய்தி பரவியதை அடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் தில் இந்து ரக்சா தளம் என்ற இந்துத் துவா அமைப்பினர் அங்குள்ள இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
”வங்கதேச நாட்டில் இந்துக்கள் மீது நடத்தப்பட்டு வருகிறது. நீங்கள் இங்கு வாழக்கூடாது. வங்கதேசத்திற்கே செல் லுங்கள்” என இந்து ரக்சா தளம் அமைப் பின் குண்டர்கள் பெண்கள், சிறுமிகள் என அனைவர் மீதும் தாக்குதல் நடத்தி குடிசைகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்த 2 பேரை கைது செய்துள்ளனர்.