அரசியல்

”இந்தியர்களுக்கு வங்கதேசம் சொல்லும் செய்தி இதுதான்” : அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

இந்தியாவை விட வளர்ந்த பொருளாதாரத்தை கொண்ட வங்கதேசத்தில்தான் ஜனநாயக உரிமைகள் கடுமையாகப் பறிக்கப்பட்டிருக்கிறது.

”இந்தியர்களுக்கு வங்கதேசம் சொல்லும் செய்தி இதுதான்” : அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாகிஸ்தானின் ஒருபகுதியாக இருந்த வங்கதேசம் இந்தியாவின் தலையீடு காரணமாக 1971-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்புகளில் 30 % இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த இடஒதுக்கீடு 2018ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இதனை மீண்டும் அமல்படுத்த ஆளும் அவாமி லீக் கட்சி முடிவு செய்தது. ஆனால் இதற்கு மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மாணவர் போராட்டத்துக்கு எதிராக வங்கதேச காவல்துறை களமிறங்கிய நிலையில், நாடு முழுவதும் மாணவர்களுக்கும் - காவல்துறைக்கும் கடும் வன்முறை நிகழ்ந்தது. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ கடந்த நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து ராணுவத்தின் ஆதரவுடன் எதிர்க்கட்சியான தேசியவாத கட்சி ஆட்சியமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வங்கதேசத்தில் போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் வங்கதேசத்தில் நடந்து வரும் போராட்டம் குறித்து தமிழ்நாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமூகவலைதளத்தில் கருத்து ஒன்று தெரிவித்துள்ளார். அதில், ”நல்ல பொருளாதார வளர்ச்சி இருந்தால் வலிமையான ஜனநாயகம் இருக்கும் என்கிற நம்பிக்கையை வங்க தேசம் உடைத்திருக்கிறது. இந்தியாவை விட வளர்ந்த பொருளாதாரத்தை கொண்ட வங்க தேசத்தில்தான் ஜனநாயக உரிமைகள் கடுமையாகப் பறிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை, நேரெதிர். யதேச்சதிகாரம் வளர்ந்தால் பொருளாதாரம் குலையும் என்பதற்கு இலங்கை உதாரணம். இந்தியாவில் என்ன நடக்குமென்பதை நாம் புரிந்து கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories