இந்தியா

இவற்றை உங்களால் தடை செய்ய முடியுமா? : ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கருத்து என்ன?

இஸ்லாமியப் பெண்கள் என்ன உடை அணிந்து வரவேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இவற்றை உங்களால் தடை செய்ய முடியுமா? : ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கருத்து என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் என்.ஜி.ஆச்சார்யா கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம்,”மாணவிகளின் அடிப்படை உரிமையை பறிப்பதாக இதைக் கருத முடியாது” தீர்ப்பு வழங்கியது.

பின்னர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ”இஸ்லாமியப் பெண்கள் என்ன உடை அணிந்து வரவேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும். அந்த சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும். இஸ்லாமியப் பெண்களை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது எனச் சொல்வது போல், மற்ற பெண்களை பொட்டு வைக்கக் கூடாது, திலகம் வைக்கக் கூடாது என்று உங்களால் சொல்ல முடியுமா? அவற்றை உங்களால் தடை செய்ய முடியுமா?” என கல்லூரி நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பினர்.

அதேநேரம், ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் சுற்றறிக்கைக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும் ஹிஜாப் ஆடைகளை மாணவி கள் அணிந்துவர விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories