இந்தியா

”வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மோடி அரசின் பழிவாங்கும் செயல்” : நாராயணசாமி எதிர்ப்பு!

ஒன்றிய அரசுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

”வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மோடி அரசின் பழிவாங்கும் செயல்” : நாராயணசாமி எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிறுபான்மையினர் உரிமைகளையும், இஸ்லாமியர்களின் மத உணர்வுகளையும், தகர்க்கும் வகையில், ஒன்றிய பா.ஜ.க அரசு, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அவ்வரிசையில், புதிதாக இணைக்கப்பட்டிருப்பது தான், வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதா. இம்மசோதா, நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படுவதற்கு முன்பே, அதன் சில வரையறைகள் பொதுவெளியில் கசிந்தன.

இந்நிலையில், அவ்வரையறைகளில் இடம்பெற்றிருக்கிற திருத்தங்கள், இந்திய அரசியலமைப்பின் அடிப்படையையும், மத உரிமையையும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது என இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதையடுத்து வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. இந்நிலையில் வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதாவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, ”இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்புகளை அடுத்து வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. ஒரு மதத்தின் செயல்பாடுகளில் மற்ற மதத்தினர் தலையிட கூடாது. இவ்விவகாரத்தில் மோடி அரசு திட்டமிட்டு பழிவாங்குகிறது.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories