இந்தியா

வினேஷ் போகத் தகுதிநீக்கம் : அதிகாரத்தின் இடையூறு தான் காரணமா?

ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 117 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், இரண்டு ஊட்டச்சத்து நிபுணர்களே அனுப்பப்பட்டுள்ளனர். அதிலும் வினேஷ் போகத்திற்கு தனி உடற்பயிற்சி வல்லுநர் கூட நியமிக்கப்படவில்லை.

வினேஷ் போகத் தகுதிநீக்கம் : அதிகாரத்தின் இடையூறு தான் காரணமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒலிம்பிக் போட்டிகள் என்றாலே, இந்தியா பெறும் பதக்கங்களின் எண்ணிக்கை ஒற்றை எண்ணிக்கையை கடந்தது இல்லை. அதற்கு தற்போதைய ஒலிம்பிக்கும் விலக்கில்லை என்பது ஒவ்வொரு நாளும் தெளிவுபட தொடங்கியுள்ளது.

எனினும், பல தடைகளைக் கடந்து, தங்களது முழு முயற்சிகளால் ஒலிம்பிக்கில் இடம்பெறும் இந்திய அணி வீரர்/ வீராங்கனைகளுக்கு, தகுந்த ஊக்கம் தருவதில் கூட இந்திய ஒலிம்பிக் சங்கம் முழு கவனம் செலுத்துவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு எடுத்துக்காட்டாக, ஒன்றிய பா.ஜ.க அரசின் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் இந்திய மல்யுத்த அமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன், பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் வன்முறை அளித்தார் என்று குற்றம் சாட்டி சாலைகளில் போராடிய பலரில், ஒருவரான வினேஷ் போகத், நடப்பு ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியும், உடல் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது அமைந்துள்ளது.

இதற்கு முதன்மை காரணமாக, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்ட நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் இரண்டு ஊட்டச்சத்து நிபுணர்களே அனுப்பப்பட்டுள்ளனர். அதிலும் வினேஷ் போகத்திற்கு தனி உடற்பயிற்சி வல்லுநர் கூட நியமிக்கப்படாதது வெளிச்சமடைந்துள்ளது.

அது மட்டுமில்லாமல், நேற்றைய நாள் (06.08.24) இரவு, வினேஷ் இறுதிசுற்றுக்கு முன்னேறியதிலிருந்தே, சமூக வலைதளங்கள் முழுமையிலும், மோடிக்கு எதிரான அலை பரவியது.

“கடந்த ஆண்டு, பா.ஜ.க.வின் பிரிஜ் பூஷனுக்கு எதிராக சாலையில் போராடிய போது, காவல்துறை கொண்டு அப்புறப்படுத்தப்பட்ட மல்யுத்த வீரர்/ வீராங்கனைகளுள் வினேஷ் போகத் அவர்களும் ஒருவர். இவர்களை அப்போது என்ன என்று கூட கேட்காத பிரதமர் மோடி, தங்கம் வென்ற பிறகு எந்த முகத்துடன் பாராட்டி பேசுவார்?” என்ற கருத்துகள் தீயாய் பரவின.

வினேஷ் போகத் தகுதிநீக்கம் : அதிகாரத்தின் இடையூறு தான் காரணமா?

இந்நிலையில், வினேஷ் போகத்திற்கு ஆதரவு அலையும், பிரதமர் மோடிக்கு எதிரலையும் பரவத்தொடங்கிய 12 மணிநேரத்திற்குள், ஒலிம்பிக் போட்டியிலிருந்து, எடை அதிகமாக உள்ளார் என தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் வினேஷ் போகத்.

இதனால், வினேஷ் போகத் தகுதிநீக்கத்தில் ஏதோ சதி நிகழ்ந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு வலுக்கத்தொடங்கியுள்ளது.

இது குறித்து குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங், “ஒரு வீரர் இறுதிப்போட்டியில் இப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டது வரலாறு காணாதது. 100 கிராம் ஒன்றும் பெரிய விவகாரம் இல்லை. குத்துச்சண்டை வீரர்களுக்கு உடல் எடையை குறைக்க ஒரு மணி நேரத்துக்கு மேல் அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏதோ சதி நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் செயல்பட்டு கொண்டிருப்பதால், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள், “வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து மக்களவையில் ஒன்றிய அரசு விளக்கமளிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ், “பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் இறுதி சுற்றுக்கு முன்னேறி, பிறகு தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும். தகுதி நீக்கத்திற்கான உண்மை காரணம் வெளிப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories