இந்தியா

அதானி துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் : குஜராத்தில் அதிர்ச்சி !

குஜராத்தில் உள்ள அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதானி துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் : குஜராத்தில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

குஜராத் மாநிலத்தில் அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் திடீரென சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான பெட்டிகள் அங்கு இருந்துள்ளது.

தொடர்ந்து அதனை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் ரூ. 110 கோடி மதிப்புள்ள 68 லட்சம் டிராமடோல் என்ற போதை மாத்திரைகள் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சுங்க அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.

அதானி துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் : குஜராத்தில் அதிர்ச்சி !

தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த போதை மாத்திரைகள் ஆப்பிரிக்க நாடுகளான சியரா லியோன் மற்றும் நைஜீரியாவுக்கு அனுப்ப தயாராக வைக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் ராஜ்கோட்டை சேர்ந்த வணிக ஏற்றுமதியாளர் பெயரில் இந்த போதை பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டதும் தெரியவந்தது.

சமீப காலமாக இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரம் என்று கூறும் வகையில் குஜராத்தில் அதிகளவில் போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அங்கிருந்தே நாடு முழுவதும் அவை பரப்பப்படுகிறது என்றும் விமர்சனம் தொடர்ந்து வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories