இந்தியா

🔴#Live || Budget 2024-ல் புறக்கணிப்பு - "தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகம்!"- முதலமைச்சர் கண்டனம்!

🔴#Live || Budget 2024-ல் புறக்கணிப்பு - "தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகம்!"- முதலமைச்சர் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதே சரியானது !

“ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க விரும்பவில்லை.

தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதே சரியானது என நினைக்கிறேன்.

தமிழ்நாட்டின் தேவைகளை, உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தின் போராடுவோம்.”

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நீதி இல்லா நிதிநிலை அறிக்கை!

“இந்த நிதிநிலை அறிக்கையில் நீதி இல்லை. அநீதி தான் அதிகம் உள்ளது. வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்கும் திட்டங்களை கொண்டு வருவதே ஒரு சிறந்த அரசு ஆகும். அப்படிதான் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் உள்ளது. தமிழ்நாட்டை பார்த்தாவது ஒன்றிய அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்”

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

வன்மத்தைக் கக்கும் நிதிநிலை அறிக்கை!

”மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது இந்திய மக்களாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களைச் சிதைத்திடும் வகையில் அமைந்துள்ளது.”

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மத்தியதரக் குடும்பங்களுக்கு ஏமாற்றம்!

”ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையானது, நடுத்தர மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்யாமல், வெறும் பெயரளவிற்கு வருமானவரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகளாக வரிக்குறைப்பின்றி இருந்துவந்த நிலையில் வெறும் ரூ.17,500 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதும், இக்குறைப்புகூட புதிய வரிமுறையில் மட்டுமே செய்யப்பட்டு, பழைய முறையில் எவ்வித குறைப்பும் அளிக்கப்படாததும் மத்தியதரக் குடும்பங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.”

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பெயர் வைத்தால் மட்டும் போதாது!

பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒன்றிய அரசின் பங்கு ரூ.1.5 இலட்சம். இதில் மாநில அரசால் சுமார் ரூ.12-14 இலட்சம் ரூபாய் ஒரு வீட்டிற்கு செலவிடப்படுகிறது.

ஒன்றிய அரசின் பங்கினை உயர்த்தாமல், வீடுகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.

திட்டத்திற்கு பிரதமரின் பெயரை வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. அதற்கேற்றால்போல நிதியும் வழங்கப்பட வேண்டும்.

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்!

”ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது போல் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கை இது.”

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ST, SC மாணவர்களுக்கு எந்த நலத்திட்டமும் இல்லை!

“இன்டர்ன்ஷிப்பிற்கு பிறகு என்ன நடக்கும்? வேலையில்லாதவர்களை மேலும் வேலையில்லாதவர்களாக மாற்றும் நடவடிக்கையே இது. பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதத்திற்கான அறிவிப்பு இல்லை. சுகாதாரம் மற்றும் கல்விக்கான பட்ஜெட் கூடுதல் நிதி ஒதுக்கவில்லை. ST, SC மாணவர்களின் நலனுக்காக எந்த ஒரு நலத்திட்டமும் அறிமுகப்படுத்தப்படவில்லை”

- ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) எம்.பி சந்திரசேகர் ஆசாத்!

ஒன்றிய அரசின் பட்ஜெட் மக்களுக்கானது அல்ல!

“ஒன்றிய அரசின் பட்ஜெட் மக்களுக்கு எதிரானது, ஏழைகளுக்கு எதிரானது, சாதாரண மக்களுக்கு அல்ல. இது ஒரு தரப்பினரை திருப்திபடுத்தும் பட்ஜெட். இது அரசியல் சார்புகள் நிறைந்த பட்ஜெட்.இந்த பட்ஜெட்டில் தொலைநோக்குப் பார்வை இல்லை”

- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம்!

முழு பட்ஜெட்டையும் மறுசீரமைக்க வேண்டும்!

“NDA கூட்டணி ஆட்சியின் மிக மோசமான பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டால் சென்செக்ஸ் மற்றும் பங்குச் சந்தை உட்பட அனைத்தும் பின்னடைவை சந்தித்தன. நாங்கள் ஆந்திரா மற்றும் பீகாருக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் இந்தியா பல மாநிலங்களைக் கொண்ட நாடு மற்றும் பல்வேறு வகையான மக்கள் உள்ளனர். ஒன்றிய அரசு முழு பட்ஜெட்டையும் மறுசீரமைக்க வேண்டும்”

- CPI எம்.பி சந்தோஷ் குமார் வலியுறுத்தல்!

இது நாற்காலியைப் பாதுகாக்கு முயற்சி!

”சாதிவாரி கணக்கெடுப்புக்கு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. நாடு பணவீக்கத்தால் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. அதைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி ஒன்றிய அரசு எதுவும் குறிப்பிடவில்லை. இந்த நிதிலை அறிக்கையில் நடுத்தர, ஏழை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை. மோடி அரசு தங்கள் நாற்காலியைப் பாதுகாப்பதற்காக, சிலரை மகிழ்விக்கும் செயலை பட்ஜெட்டில் வெளிப்படையாக செய்துள்ளனர்”

- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே!

இந்த பட்ஜெட் கூட்டாட்சிக்கு எதிரானது!

“இது தோல்வியுற்ற, பூஜ்ஜிய உத்தரவாத பட்ஜெட் ஆகும். இரண்டு கூட்டணி கட்சிகளுக்கு பட்ஜெட் மூலம் லஞ்சம் கொடுத்துள்ளது ஒன்றிய அரசு. இந்த பட்ஜெட் கூட்டாட்சிக்கு எதிரானது.

அரசியல் நெறிமுறை ரீதியாக வெறுக்கத்தக்கது. மேலும் அரசியலமைப்பு ரீதியாக ஒழுக்கக்கேடானது மற்றும் பொருளாதார ரீதியாக நாசமான பட்ஜெட்டாகும்.”

- திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சகரிகா கோஸ் கண்டனம்.

தமிழ்நாட்டை புறக்கணித்த ஒன்றிய பட்ஜெட்!

பீகார், ஆந்திரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமே ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தையே இடம் பெறவில்லை.

நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய பா.ஜ.க அரசு மோசமான அணுகுமுறையை கையாள்கிறது.

விவசாயிகளுக்கு மிகக் குறைந்தளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- டெல்லியில் மாநிலங்களவை தி.மு.க குழுத்தலைவர் திருச்சி சிவா பேட்டி!

மாநில பட்ஜெட்டா, ஒன்றிய அரசு பட்ஜெட்டா?

வரலாற்றிலேயே முதன்முதலாக ஒன்றிய நிதி அமைச்சர், பிகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.

- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜான் பிரிட்டாஸ்!

இது நாற்காலியைப் பாதுகாக்கு முயற்சி!

”சாதிவாரி கணக்கெடுப்புக்கு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. நாடு பணவீக்கத்தால் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. அதைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி ஒன்றிய அரசு எதுவும் குறிப்பிடவில்லை. இந்த நிதிலை அறிக்கையில் நடுத்தர, ஏழை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை. மோடி அரசு தங்கள் நாற்காலியைப் பாதுகாப்பதற்காக, சிலரை மகிழ்விக்கும் செயலை பட்ஜெட்டில் வெளிப்படையாக செய்துள்ளனர்”

- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே!

பீகாருக்கு 37,500 கோடி, தமிழ்நாட்டுக்கு பூஜ்யம் !

2024 ஏப்ரல் மாத GST வசூல் மூலம் ஒன்றிய அரசுக்கு பீகார் கொடுத்தது ரூ. 1,992 கோடி... தமிழ்நாடு கொடுத்தது ரூ.12,210 கோடி !

ஒன்றிய பட்ஜெட்டின் பீகார் சிறப்பு திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு ரூ.37,500 கோடி... தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியது - ரூ.0

”பதவியை ஒன்றும் செய்ய வேண்டாம்” எனக் கதறும் பட்ஜெட்!

கூட்டணிகளை ஆசுவாசப்படுத்த, பிற மாநிலங்களை பொருட்படுத்தாமல் வெற்று வாக்குறுதிகள் அக்கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதானிக்கும் அம்பானிக்கும் பலன்கள் வழங்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்களிலிருந்து 'copy, paste' செய்யப்பட்டிருக்கிறது.

- ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி!

ரயில்வே துறையை மறந்த ஒன்றிய அரசு!

தொடர்ந்து ரயில் விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஒரு அறிவிப்புக்கூட இடம் பெறவில்லை!

கூட்டணி கட்சிக்காக கொட்டப்பட்ட நிதி !

மைனாரிட்டி அரசாங்கத்தை தாங்கிப் பிடிக்கிற ஐக்கிய ஜனதா தளத்தையும், தெலுங்கு தேசம் கட்சியையும் திருப்தி படுத்துவதற்கு அரசு நிதி அள்ளிக் கொட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆந்திர பிரதேசத்துக்கு தனித்தகுதி அளிக்க மறுத்த பாஜக அரசு இப்போது அவர்கள் கேட்ட நிதியை வழங்கி இருக்கிறது.

- ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்.

அடுத்து ஹரியானா மாநிலமும் புறக்கணிப்பு!

”பெரும் ஏமாற்றம். ஹரியானாவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த 10 வருடங்களிலும் அவர்கள் எதையும் செய்யவில்லை. எதிர்காலத்துக்கும் அவர்கள் இந்த பட்ஜெட்டில் எதையும் அறிவிக்கவில்லை. ஹரியானா முற்றாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.”

- தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி எம்.பி. குமாரி செல்ஜா!

இது பிற்போக்குத்தனமான நிதிநிலை அறிக்கை!

ஒன்றிய அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால், தங்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பாரபட்சமாக நிதி ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும்.

நீண்டகாலமாக அனைத்து நிலைகளிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்று எழுப்பப்பட்ட கண்டன குரலுக்கு எந்த வகையிலும் ஒன்றிய அரசு செவி மடுக்கவில்லை.

இந்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத, வேலை வாய்ப்பை பெருக்காத, சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வை சமன் செய்யாத ஒரு பிற்போக்குத்தனமான நிதிநிலை அறிக்கை!

- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்.

விவசாயிகளை புறக்கணித்திருக்கும் பட்ஜெட்!

விவசாயிகளுக்கு எந்த பலனும் இந்த பட்ஜெட்டில் இல்லை. இயற்கை விவசாயத்தை விவசாயிகளுக்கு நிறுவனங்கள் கற்றுக் கொடுக்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது இந்த பட்ஜெட். பயிருக்கு விலையும் இலவச மின்சாரமும் மலிவான உரமும் விவசாயக் கருவிகளுக்கான GST குறைப்பும் இதில் இல்லை.

- விவசாயத் தலைவர் ராகேஷ் திகாயத்!

பட்ஜெட்டில் “தமிழ்நாடு” என்ற வார்த்தையே இல்லை!

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், “தமிழ்நாடு” என்ற வாசகமே இடம்பெறவில்லை.

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு!

* தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிதி ஒதுக்கவில்லை.

* 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பும் இல்லை.

* கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் பற்றிய அறிவிப்பும் இடம்பெறவில்லை.

* தாம்பரம் செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கு ஒப்புதல் பற்றிய அறிவிப்பும் இடம்பெறவில்லை.

* தமிழ்நாட்டில் புதிய ரயில்வே திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

* தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

ஒன்றிய பட்ஜெட் - தமிழ்நாடு புறக்கணிப்பு!

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு!

கூட்டணிக்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு நிதியை வாரிவழங்கியுள்ள ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை.

மகாராஷ்டிராவை ஒதுக்கியிருக்கும் பட்ஜெட்!

பட்ஜெட்டை ‘பிரதமரின் ஆட்சியைக் காப்பாற்றும் திட்டம்’ என்றுதான் அழைக்க வேண்டும். மகாராஷ்டிராவுக்கு வழக்கம்போல் எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. மகாராஷ்டிராவில் இருந்து பணத்தை கறந்து கொண்டு, மாநிலத்துக்கு எதுவும் தராமல் இருப்பதே ஒன்றிய பாஜக அரசின் வாடிக்கையாக இருக்கிறது.

- சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) பிரியங்கா சதுர்வேதி!

பிகாருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை?

சிறப்பு அந்தஸ்துக்கு நிதி அயோக் குறிப்பிடும் நிபந்தனைகள் போல, 1990 முதல் 2002 வரை ஜார்க்கண்ட் இணைந்திருந்தபோது மலைப்பாங்கான இடமாகதான் பிகாரும் இருந்தது. பழங்குடி மக்கள்தொகையும் இருந்தது. ஆனாலும் ஏன் சிறப்பு அந்தஸ்து கொடுப்பது குறித்து எவரும் பொருட்படுத்தவில்லை? பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது எங்கள் கட்சியின் வாக்குறுதி மட்டுமல்ல, பாஜக எங்களுக்கு அளித்த வாக்குறுதியும் கூட.”

- பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லாததை பற்றி ஐக்கிய ஜனதாதளத் தலைவர் நீரஜ் குமார்!

நிதிநிலை அறிக்கையால் சரிந்த பங்குச்சந்தைகள்!

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தொழில்துறையினர் எதிர்பார்த்த எந்த அறிவிப்பும் இடம்பெறாததால் பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.

சந்திரபாபு நாயுடு என்ன செய்வார்?

2018ம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காததால்தான் சந்திரபாபு நாயுடு NDA கூட்டணியை விட்டு வெளியேறினார். ஆறு வருடங்கள் கழித்து பெரும் நாடகங்களுக்கு பின், கூட்டணியை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு அரசு வந்த பிறகும் கூட, அவருக்கு வெறும் “சிறப்பு நிதி உதவி” மட்டும்தான் அளிக்கப்பட்டிருக்கிறது.

- காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்!

காங்கிரஸ் திட்டங்களை காப்பி அடித்திருக்கும் பாஜக!

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நிதி அமைச்சர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை படித்திருக்கிறார் போல. பக்கம் 30-ல் இடம்பெற்ற ’வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை’ திட்டத்தை அவர் அறிவித்திருப்பது சந்தோஷம் அளிக்கிறது. பக்கம் 11-ல் இடம்பெற்றிருக்கும் பயிற்சிப் பணி திட்டத்தையும் அவர் அறிவித்திருக்கிறார். இன்னும் அவர் காப்பி அடித்திருக்கும் காங்கிரஸ் திட்டங்களை சற்று நேரத்தில் பட்டியலிடுகிறேன்.

- காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் பதிவு!

Census எடுக்க நிதி மறுத்திருக்கும் பாஜக!

2021ம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒன்றிய அமைச்சர் நிதி வழங்கவில்லை. சுதந்திரத்துக்கு பிறகு, மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்காத முதல் அரசாங்கம் இதுதான். மாநில நிர்வாகத் திறனை இது பாதிக்கும். NDA கூட்டணி கட்சிகள் கோரிய சாதிவாரி கணக்கெடுப்பையும் இந்த அரசாங்கம் தவிர்க்கவே செய்யும்!

- காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்!

’நான் முதல்வன்’ திட்டத்தை காப்பி அடித்த பாஜக!

1 கோடி இளைஞர்களுக்கு 500 முன்னணி நிறுவனங்களில் பயிற்சிப் பணி வாய்ப்புகள் வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கிராமப்புற மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் பயிற்சிப் பணி வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் திட்டத்தை அறிவித்திருக்கும் பாஜக!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலிருந்த பயிற்சிப் பணித் திட்டத்தை நிதி அமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார். ஆனாலும் தலைப்புச் செய்தியை பிடிக்கவென ‘ஒரு கோடி பயிற்சிப் பணி’ என அறிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர, காங்கிரஸ் கட்சி அறிவிப்பை போல், முறையாக திட்டமிடப்பட்ட முறையில் அறிவிப்பு அமலாகாது.

- காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்!

வேலையின்மையை ஒருவழியாக ஒப்புக்கொண்ட பாஜக!

பத்து வருட புறக்கணிப்புக்கு பிறகு ஒருவழியாக ஒன்றிய அரசு, வேலைவாய்ப்பின்மையை ஒரு தேசியப் பிரச்சினையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. விளைவாக, வேலைகளை குறித்த பேச்சு நிதிநிலை அறிக்கையில் அதிகம் இடம்பெற்றிருக்கிறது.

எனினும் நிதிநிலை அறிக்கை உரை, நடவடிக்கையில் கவனம் செலுத்தாமல் வெறும் வார்த்தைகளில்தான் கவனம் செலுத்தியிருக்கிறது.

- காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்!

கூட்டணி பயத்தில் பாஜக!

பிகாருக்கும் ஆந்திராவுக்கு பெருமளவுக்கு நன்மை கிடைத்திருக்கிறது. பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் அவர்களது மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐக்கிய ஜனதாதளத்தையும் தெலுங்கு தேசத்தையும் சமாதானமாக வைக்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு இன்னும் இருக்கிறது.

- ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்!

இப்போதுதான் இவர்கள் கண்ணுக்கு தெரிகிறார்களா?

ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை 4 சாதிகள் என குறிப்பிட்டு அவர்களான பட்ஜெட் இது என்று உரையை தொடங்கினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இந்தியாவில் தினசரி வருமானம் குறைந்து ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க கோரி தொடர்ந்து போராட்டம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவம் அதிகரிப்பு, வேலையின்றி இளைஞர்கள் அவதி என கடந்த 10 ஆண்டுகளில் இந்த 4 சாதிகளின் நிலை இதுதான்!

சந்திரபாபு நாயுடு என்ன செய்வார்?

2018ம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காததால்தான் சந்திரபாபு நாயுடு NDA கூட்டணியை விட்டு வெளியேறினார். ஆறு வருடங்கள் கழித்து பெரும் நாடகங்களுக்கு பின், கூட்டணியை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு அரசு வந்த பிறகும் கூட, அவருக்கு வெறும் “சிறப்பு நிதி உதவி” மட்டும்தான் அளிக்கப்பட்டிருக்கிறது.

- காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்!

இதுதான் வறுமை ஒழிப்பா?

வறுமை ஒழிப்புத் திட்டத்தின் மூலம் 80 கோடி பேர் பயன்பெற்றுள்ளதாக ஒன்றிய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் இந்தியாவில் 50% மக்களுக்குத்தான் மூன்று வேளையும் உணவு கிடைக்கிறது என்று அண்மையில் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி கட்சிகளுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை!

கூட்டணியை தக்க வைத்துக்கொள்வதற்காக பீகார் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுக்கு ஒன்றிய பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள் அறிவித்துள்ளது பாஜக அரசு !

பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ.26 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு; ஆந்திராவிற்கு ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு !

இதுதான் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதா?

“இந்தியாவில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது”

- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! இந்தியாவின் சில்லறை பணவீக்கம் மே 2024 இல் 4.75% ஆக இருந்து ஜூன் மாதத்தில் 5.08% ஆக உயர்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத் தரவு அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

திராவிட மாடல் திட்டத்தை பின்பற்றும் ஒன்றிய அரசு!

பணிபுரியும் பெண்களுக்கு நாடு முழுவதும் சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என ஒன்றிய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ஒன்றிய அரசு அறிவிப்பதற்கு முன்பே, தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு தோழி விடுதி திட்டத்தை நடைமுறைபடுத்தி வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு!

காற்றில் பறந்த வேலைவாய்ப்பு வாக்குறுதி!

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து, ஆண்டுக்கு ஒருகோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என்ற வாக்குறுதியை மோடி நிறைவேற்றாத நிலையில், “நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என பட்ஜெட் உரையில் தெரிவித்திருக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கடந்த வாரங்களில் முப்பை, குஜராத் மாநிலங்களில் வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் திரண்ட சம்பவம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது!

ரூ.1,36,000 கோடி நிலுவையில் உள்ளது!

”ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு ஒன்றிய அரசிடம் நிதி கேட்கப்படுகிறது. எங்கள் மாநிலம் நாடு முழுவதும் நிலக்கரியை வழங்குகிறது. ஆனால் மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1,36,000 கோடி ராயல்டி நிலுவையில் உள்ளது. ”

- பட்ஜெட் குறித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. மஹுவா மாஜி !

தலைமை பொருளாதார ஆலோசகரின் கருத்து பொய்யா?

“சர்வதேச பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நீடிக்கிறது.”

சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு அதிகரித்ததாக ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வர்ன் நேற்று தெரிவித்த கருத்துக்கு, முரணான தகவலை பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ஒன்றிய அரசின் முழு பட்ஜெட் தாக்கல் !

2024 - 2025 ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று முழு பட்ஜெட் தாக்கல்!

banner

Related Stories

Related Stories