தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மும்பையில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "ஒன்றியத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிச்சயமற்ற நிலையில் உள்ளதால், மோடி அரசு நீண்ட காலம் நிலைக்காது.
பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் அவசர நிலையுடன் தொடர்புடைய தருணங்களே பெரும்பாலும் எதிரொலித்தது.மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை யாருடனும் ஆலோசிக்காமல் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.
ஏராளமான எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நேரத்தில் புதிய குற்றவியல் சட்டங்களை அவசரம், அவசரமாக நிறைவேற்றம்மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது."என தெரிவித்துள்ளார்.