இந்தியா

பீகார் : 15 நாட்களில் 10-வது... 100 ஆண்டு பழமை முதல் புதியது வரை... அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்!

பீகார் : 15 நாட்களில் 10-வது... 100 ஆண்டு பழமை முதல் புதியது வரை... அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் இங்கு, தற்போது ஒன்றன் பின் ஒன்றாக பாலம் இடிந்து விழும் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் அங்கு பல்வேறு பகுதிகளில் இருக்கும் பாலங்கள் அடுத்தடுத்து என இடிந்து விழுந்து வருகிறது. ஏற்கனவே அங்கு புதிதாக கட்டிக்கொண்டிருந்த பாலம், கட்டி முடித்து திறப்புக்கு காத்திருந்த பாலம் என அடுத்தடுத்து தொடர்ந்து சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையில், தற்போது 2 வாரத்தில் 10-வது பாலம் இடிந்து விழுந்துள்ளது.

பீகார் : 15 நாட்களில் 10-வது... 100 ஆண்டு பழமை முதல் புதியது வரை... அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்!

இடிந்து விழுந்த 5 பாலங்கள் பட்டியல் :

* ஜூன் 19 : அராரியா பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட பாலம் இடிந்தது. சுமார் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், திறப்பு விழாவுக்கு முன்னதாகவே இடிந்து விழுந்தது.

* ஜூன் 22 : சிவான் பகுதியில் அமைந்துள்ள கண்டக் கால்வாய்-க்கு மேலே கட்டிமுடிக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.

* ஜூன் 22 : மதுபானியில் தாரௌண்டா பகுதியில் உள்ள பாலம் இடிந்தது

* ஜூன் 23 : கிழக்கு சம்பாரண் பகுதியில் கட்டுமான பணியில் இருந்த சிறிய பாலம் இடிந்தது.

* ஜூன் 26 : கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள பாலமும் இடிந்தது.

* ஜூன் 27 : மதுபானி பகுதியில் சுமார் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பாலமும் இடிந்தது.

பீகார் : 15 நாட்களில் 10-வது... 100 ஆண்டு பழமை முதல் புதியது வரை... அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்!

=> சரண் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.

* ஜூலை 3 : இதே சரண் மாவட்டத்தின் ஜந்தா பஸாரில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான மற்றும் லஹ்லாத்பூரில் உள்ள 25 ஆண்டுகளே ஆன பாலமும் இடிந்து விழுந்துள்ளது.

* ஜூலை 3 : மகாராஜ்கஞ்ச் டியோரியா பகுதியில் உள்ள பாலம் இடிந்து விழுந்துள்ளது.

* ஜூலை 4 : சிவான் மாவட்டத்தின் சர்ண் பகுதியில் கண்டகி ஆற்றின் மேலே இருக்கும் இந்த பாலம், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.

banner

Related Stories

Related Stories