இந்தியா

RSS குறித்து விமர்சித்த மல்லிகார்ஜூன கார்கே : அவை குறிப்பில் இருந்து நீக்கிய மாநிலங்களவை தலைவர்!

ஆர்.எஸ்.எஸ் மீது குற்றச்சாட்டு வைத்த மல்லிகார்ஜூன கார்கே பேச்சை அவைகுறிப்பில் இருந்து ஜகதீப் தன்கர் நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

RSS குறித்து விமர்சித்த மல்லிகார்ஜூன கார்கே : அவை குறிப்பில் இருந்து நீக்கிய மாநிலங்களவை தலைவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

18 ஆவது மக்களவை கூட்டத் தொடர் ஜூன் 24 ஆம் தேதியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் புதிய எம்.பி.கள் பதிவயேற்பு நடைபெற்றது. பின்னர் நடந்த சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லா வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரையைத் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே,”எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் இல்லாமல், மகாத்மா காந்தி, அம்பேத்கர், சிவாஜி உள்ளிட்டோரின் சிலைகளை இடம் மாற்றி, தலைவர்களை அவமதித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.

நீட் மோசடி குறித்து எதிர்க்கட்சிகள் பேசினால், பிரதமர் மாங்கல்யத்தை பற்றி பேசுகிறார். மணிப்பூரில் ஓராண்டுக்கு மேலாக பிரச்சனை நீடிக்கும் நிலையிலும், பல நாடுகளுக்கு செல்லும் பிரதமர், மணிப்பூர் செல்ல மறுக்கிறார். மக்கள் பிரச்சினைகளை பிரதமரும் பேசுவதில்லை. பா.ஜ.க.வும் பேசுவதில்லை” என்ற குற்றச்சாட்டை முன்வை பேசினார்.

மேலும் மல்லிகார்ஜூன கார்கே பேசும் போது, கல்வி அமைப்புகள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இராணுவ பள்ளிகளின் நிர்வாகம், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது என கூறினார். இதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் கூறினார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories