இந்தியா

புதிய குற்றவியல் சட்டம் அமல் : முதல் வழக்கு பதிவு - பாசிச முகத்தை காட்டும் பா.ஜ.க அரசு!

புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் டெல்லியில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய குற்றவியல் சட்டம் அமல் : முதல் வழக்கு பதிவு - பாசிச முகத்தை காட்டும் பா.ஜ.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு பதிலாக, முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா மற்றம் பாரதிய சாக்ஷியா ஆகிய 3 புதிய குற்றவியல் மசோதாக்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பா.ஜ.க அரசு அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போதே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இருந்தும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளையும் மீறி இந்த புதிய 3 குற்றவியல் சட்டங்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், இந்த 3 குற்றவியல் சட்டங்களும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,“புதிய குற்றவியல் சட்டங்களின் செயலாக்கத்தைத் தள்ளி வைத்து, மாநிலங்களுடன் முறையான ஆலோசனை நடத்திட வேண்டும்” என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக நடந்து முடிந்த சட்டப்பேரவையில் விளக்கியுள்ளார்.

இந்த நிலையில், புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா கூட்டணி கட்சிகள் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories